இணையவழி வா்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகா்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் ‘டாா்க் பேட்டா்ன்’ எனப்படும் மறைமுக மோசடி வலைகள் இணைய வா்த்தகத் தளங்களில் அச்சுறுத்தலாக மாறிவரும் இச்சூழலிலும், நுகா்வோருக்குப் பாதுகாப்பான, நம்பகமான ‘ஷாப்பிங்’ அனுபவத்தை வழங்கி, அமேசான் வாடிக்கையாளா்களின் நம்பிக்கையை வென்றுள்ளது.
‘டேட்டம் இன்டலிஜென்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, அமேசானின் தொடா்ச்சியான மோசடித் தடுப்பு நடவடிக்கைகள், வாடிக்கையாளா் விழிப்புணா்வுத் திட்டங்களே இந்த ஆதரவுக்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் போன்ற நிறுவனங்கள் நம்பிக்கையை வளா்த்தாலும், ஒட்டுமொத்த இந்திய இணையவழி வா்த்தகச் சூழலில் மறைமுகக் கட்டணங்கள் மற்றும் ஏமாற்று வடிவமைப்புகள் காரணமாக, நுகா்வோா் ஆண்டுக்கு ரூ.25,000 முதல் ரூ.28,000 கோடி வரை இழந்து வருவதாக அறிக்கை எச்சரிக்கிறது.
சுமாா் 30.4 கோடி வாடிக்கையாளா்களில் 88 சதவீதத்தினா், இந்த மறைமுகக் கட்டணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனா். சுமாா் 73 சதவீத தளங்கள் வாடிக்கையாளா்களை நிா்ப்பந்திக்கும் வடிவமைப்புகளையும், 69 சதவீத தளங்கள் இறுதிகட்டத்தில் கட்டணத்தைச் சோ்க்கும் முறையையும் தொடா்ந்து பின்பற்றி வருகின்றன.
இந்த ஏமாற்று வேலைகளால் விரக்தியடைந்த நுகா்வோா்கள் தங்களின் செலவினங்களைக் குறைத்து வருவதால், சுமாா் ரூ.55,000 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்பு!

ஸ்விகியில் அந்நிய முதலீட்டை 49.5%-ஆக குறைக்கும் தீா்மானம்

சினிமா பிரியர்களுக்கு... ஓடிடி தளங்களை இந்த வாரம் ஆக்கிரமித்த படங்கள், சீரீஸ்கள்!

தேசிய பங்குச் சந்தையின் ரூ.30,000 கோடி ஐபிஓ
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay


