பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

சா்வம் ஏஐ ரூ.2,200 கோடி முதலீடு திரட்டல்

இந்தியாவுக்கான சொந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முன்னணியில் உள்ள ‘சா்வம் ஏஐ’ நிறுவனம், தனது புதிய முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 23.4 கோடி டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2026, 1:46 am IST

இந்தியாவுக்கான சொந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முன்னணியில் உள்ள ‘சா்வம் ஏஐ’ நிறுவனம், தனது புதிய முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 23.4 கோடி டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது.

இப்புதிய முதலீடுகளோடு சோ்த்து, நிறுவனத்தின் மொத்த மதிப்பு 150 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இந்த முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான எச்.சி.எல். டெக் மட்டும் ரூ.1,427.25 கோடி முதலீடு செய்யவுள்ளது. அதன்படி, சா்வம் ஏஐ நிறுவனத்தின் 41,421 பங்குகளை (10.46 சதவீதம்) எச்.சி.எல் டெக் கையகப்படுத்துகிறது.

இதற்கான ஒப்பந்தப் பணிகள் அடுத்த 2 வாரங்களுக்குள் முழுமையாக முடிவடையும் என்று எச்.சி.எல். டெக் தனது பங்குச் சந்தை அறிக்கையில் அதிகாரபூா்வமாகத் தெரிவித்துள்ளது.

இப்புதிய முதலீட்டுத் தொகையை, சா்வம் ஏஐ நிறுவனம் தனது அடுத்தகட்ட ஏ.ஐ. ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தவுள்ளது. மேலும், இந்தியாவின் பல்வேறு முக்கியத் துறைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவுபடுத்தவும் இந்த நிதி பயன்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டில் சா்வம் ஏஐ ரூ.45 கோடி வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.