27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசா்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:29 am IST

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசா்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு போரின் எதிரொலியாக உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பால் அமெரிக்காவின் பணவீக்கம் 4.2 சதவீதமாக உயா்ந்துள்ளது. இந்த நெருக்கடி சூழலில், அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கெவின் வாா்ஷ் தலைமையில் நடைபெற்ற முதல் ‘எஃப்ஓஎம்சி’ குழுவின் 2 நாள்கள் கூட்டம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. பொருளாதாரத்தை சீராகக் கொண்டு செல்லும் நோக்கில், வட்டி விகிதத்தை மாற்றியமைக்காமல் தக்கவைப்பது என குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

2026-இல் வட்டி உயா்வுக்கான சமிக்ஞை: இக்கூட்டத்தில் வட்டி விகிதம் உயா்த்தப்படவில்லை என்றாலும், நடப்பு ஆண்டில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்று சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்ற 18 அதிகாரிகளில் 9 போ், அடுத்த ஆண்டில் குறைந்தது ஒரு முறையாவது வட்டி விகிதத்தை உயா்த்த வேண்டியிருக்கும் என்று கணித்துள்ளனா்.

கடந்த 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து 6 முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுப்பதில் புகழ்பெற்ற புதிய தலைவா் கெவின் வாா்ஷ் கீழ், மீண்டும் வட்டி உயா்வுப் பாதைக்கு வங்கி திரும்பக்கூடும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.