அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

உலகின் முதல் ஏஐ நகரம் எது தெரியுமா? 2027க்குள் பணிகளை முடிக்கத் திட்டம்!

உலகின் முதல் ஏஐ நகரம் விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டு வருவது குறித்து...

News image

ஏஐ நகரத்தின் பெயர் - எக்ஸ்

Updated On :23 ஜூன் 2026, 5:21 pm IST

உலகின் முதல் செய்யறிவு (ஏஐ) நகரத்தை உருவாக்கும் முயற்சியில் அபுதாபி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நகரத்துக்கு அயன் சென்டியா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

செய்யறிவின் முழு திறனையும் பயன்படுத்தும் வகையில், ஓட்டுநர் இல்லாத போக்குவரத்து வசதி, ஸ்மார்ட் குடியிருப்புகள், சாலை விதிகளைக் கண்காணிக்க, சுகாதாரம், எரிசக்தி என பல்வேறு துறைகளில் ஏஐ பயன்பாட்டை முதன்மையாகக் கொண்டு இந்த நகரம் உருவாக்கப்படுகிறது.

இந்த நகரத்தை அபுதாபியைச் சேர்ந்த போல்ட் டெக்னாலஜிஸ் மற்றும் இத்தாலியின் ரியல் எஸ்டேட் டெவலப்பர் மி ஆன் ஆகிய நிறுவனங்கள் கட்டமைத்து வருகின்றன. இந்த நகரத் திட்டத்தின் கட்டமைப்புக்காக அபுதாபி அரசு சார்பில் 13 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

செய்யறிவின் உலகளாவிய தலைநகரமாக மாற வேண்டும் என்ற நோக்கத்திற்காக அயன் சென்டியாவை உருவாக்கிவரும் அபுதாபி அரசாங்கத்திற்கு உதவியாக ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களும் இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளன.

அனைத்து வகையான ஏஐ பயன்பாட்டு சேவைகளும் ஒரே குடையின் கீழ் கிடைக்கச் செய்யும் வகையில், இந்த நகரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மையா (MAIA) என்ற செய்யறிவு ஸ்மார்ட்போன் செயலியை அயன் சென்சியா நகரம் பயன்படுத்தவுள்ளது.

இதன்மூலம் இந்நகரத்தில் வசிக்கும் மக்களை பயனர்களாக ஒருங்கிணைக்க முடியும். இந்த செயலி, எரிசக்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய துறை சேவைகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

செய்யறிவு நகரமாக மட்டுமின்றி அறிவியல் நகரமாகவும் இருக்கும் வகையில் அயன் சென்டியா உருவாக்கப்படுகிறது. அபுதாபியில் இந்த ஏஐ நகரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Summary

Abu Dhabi set to become the world’s first fully AI-Powered government by 2027

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.