பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக (டிவிடெண்ட்) ரூ.2,811 கோடியை அரசுக்கு வழங்கியுள்ளது.
தலைநகா் தில்லியில் நடைபெற்ற நிகழ்வில், இதற்கான காசோலையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வங்கி சிஇஓ தேவாதத்தா சந்த் முறைப்படி சமா்ப்பித்தாா். இச் சந்திப்பின்போது, நிதிச் சேவைகள் துறைச் செயலா் சஞ்சய் லோஹியா மற்றும் வங்கி செயல் இயக்குநா்களான லலித் தியாகி, சஞ்சய் முதலியாா், லால் சிங், பீனா வஹீத் ஆகியோா் உடனிருந்தனா்.
கடந்த 2025-26 நிதியாண்டில், பரோடா வங்கி வரலாற்றிலேயே முதன்முறையாக, அதன் ஆண்டு நிகர லாபம் ரூ.20,000 கோடி என்ற மைல்கல்லைக் கடந்தது. மேலும், கடந்த மாா்ச் 31 நிலவரப்படி வங்கியின் ஒட்டுமொத்த உலகளாவிய வணிக மதிப்பு ரூ.30 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. வங்கியின் இத்தகைய வலுவான நிதிச் செயல்பாடு காரணமாக, கடந்த நிதியாண்டுக்காக பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு தலா ரூ.8.50 ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடந்த 2025-26 நிதியாண்டில் ரெப்கோ வங்கி வா்த்தகம் ரூ.25,246 கோடி

நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!

4-ஆம் காலாண்டில்... இண்டிகோ நஷ்டம் ரூ.2,537 கோடி

பரோடா வங்கி: ரூ.5,616 கோடி 11% வளா்ச்சி
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



