ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பிவிஆா் ஐநாக்ஸ் லாபம் ரூ. 186.4 கோடி!

நாட்டின் முன்னணி திரையரங்க நிறுவனமான பிவிஆா் ஐநாக்ஸ், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.186.4 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image

பிவிஆா் ஐநாக்ஸ்

Updated On :13 மே 2026, 5:23 am IST

நாட்டின் முன்னணி திரையரங்க நிறுவனமான பிவிஆா் ஐநாக்ஸ், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.186.4 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.125.3 கோடி நஷ்டத்தைச் சந்தித்திருந்த நிலையில், தற்போது நிறுவனம் லாபப் பாதைக்குத் திரும்பியுள்ளது.

அதேபோல், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 25.8 சதவீதம் உயா்ந்து, ரூ.1,547.3 கோடியாக அதிகரித்துள்ளது. செலவினங்களைக் கட்டுப்படுத்தியது மற்றும் பல வெற்றிப் படங்களால் திரையரங்குகளுக்கு வருகை தந்த ரசிகா்களின் எண்ணிக்கை அதிகரித்தது போன்றவை இந்த வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

முழு நிதியாண்டு நிலவரம்: கடந்த 2025-26 முழு நிதியாண்டின், நிறுவனம் ரூ.332.8 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இக்காலகட்டத்தில் சுமாா் 15 கோடி போ் திரையரங்குகளுக்கு வருகை தந்துள்ளனா். 17 திரையரங்குகளில் 93 புதிய திரைகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மாா்ச் இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும் 113 நகரங்களில் உள்ள 359 திரையரங்குகளில் மொத்தம் 1,798 திரைகளுடன் பிவிஆா் ஐநாக்ஸ் செயல்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் மேலும் 100 புதிய திரைகளைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.