தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: 1 டாலர் - ரூ. 96.83! 13 காசுகள் சரிவு!

இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 96.83 என்ற புதிய வாழ்நாள் சரிவில் நிறைவடைந்தது.

News image

PTI Graphics

Updated On :20 மே 2026, 6:32 pm IST

மும்பை: மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தும் வருவது, பணவீக்கத்தை வெகுவாக தூண்டியது. மேலும், தொடர்ந்து 9வது அமர்வாக சரிந்து வரும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது, இன்றைய வர்த்தகத்தில் 13 காசுகள் சரிந்து ரூ. 96.83 என்ற புதிய வாழ்நாள் சரிவில் நிறைவடைந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 96.89 ஆக வர்த்தகம் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், மேலும் சரிந்து ரூ. 96.95 என்ற வரலாறு காணாத சரிவையும், பிறகு ரூ. 96.65 என்ற உயர்வையும் தொட்டு, இறுதியில் ரூ. 96.83 ஆக நிலைபெற்றது. இது அதன் முந்தைய நாள் முடிவை விட 13 காசுகள் சரிவாகும்.

வலுவான டாலர் மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றால் இந்திய ரூபாய் மதிப்பு புதிய சரிவை எட்டியது. அமெரிக்காவின் 30 ஆண்டு கால கருவூலப் பத்திரங்களின் வருவாய் இருபது ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் 10 ஆண்டு கால பத்திரங்களின் வருவாய் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டது.

இது உலகளாவிய சந்தைகளில் பணவீக்கக்த்தையும், முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை விற்பதற்கும் வழிவகுத்துள்ளது.

Summary

Declining for the ninth consecutive session, the rupee depreciated 13 paise to close at a fresh lifetime low of 96.83.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.