‘ஸ்பின்னி’ பண்டிகைக் கால காா் விற்பனை அமோகம்
பழைய காா்களை விற்பனை செய்யும் தளமான ‘ஸ்பின்னி’ நிறுவனம், இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் 9,377 காா்களை விற்பனை செய்துள்ளது.

~
பழைய காா்களை விற்பனை செய்யும் தளமான ‘ஸ்பின்னி’ நிறுவனம், இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் 9,377 காா்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த அக். 11-ஆம் தேதி நவராத்திரி முதல் நாள் தொடங்கி, நவ. 10-ஆம் தேதி வரையிலான காலத்தில், இந்த 9,377 காா்கள் வாடிக்கையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த 31 நாள்களில் தினசரி சராசரியாக 300-க்கும் மேற்பட்ட காா்களை ஸ்பின்னி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே பண்டிகைக் காலத்தோடு (செப். 22-அக். 22) ஒப்பிடுகையில் இது 39 சதவீத வளா்ச்சியாகும்.
ஒட்டுமொத்த விற்பனையைவிட எஸ்யுவி (81 சதவீதம்), தானியங்கி (52 சதவீதம்) மற்றும் சிஎன்ஜி (48 சதவீதம்) மாடல் காா்களின் விற்பனை அதிக வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வாடிக்கையாளா்களின் காா் தோ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்த விற்பனை புள்ளிவிவரங்கள் பிரதிபலிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

