எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்! சஞ்சய் மல்ஹோத்ரா வாழ்த்து!
எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்ட வாழ்த்துச் செய்தி....

சஞ்சய் மல்ஹோத்ரா - ANI
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் தொடங்கியிருக்கும் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் தேசிய வணிக நாளிதழுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தேசிய வணிக நாளிதழான 'தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்படுகிறது.
இதன் மூலம், வணிகம், சந்தைகள், நமது நாடு மற்றும் உலகத்தை வடிவமைக்கும் காரணிகளை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் இதழியலை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் உறுதிப்படுத்துகிறது.
தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு, மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் பொருளாதாரச் சூழல் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இக்காலகட்டத்தில், நம்பகமான, தரவுகள் அடிப்படையிலான மற்றும் ஆழமான பார்வை கொண்ட நிதியியல் இதழியல் - The Financial Standard - சந்தையைப் பற்றிய புரிதலை ஆழப்படுத்துவதிலும், தகவலறிந்த பொது விவாதங்களை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இத்திசையில் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் புதிய முயற்சியான 'தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) மாபெரும் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகச் சிறந்த பணிகளுக்கு புதிய அளவுகோல்களை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Summary
'The Financial Standard' from the Express Group! Best wishes from Sanjay Malhotra!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

