தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

ஐபிஓ மூலம் சாதனை அளவாக ரூ.94,205 கோடி திரட்டல்

நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பா் ) நிறுவனங்கள் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் சாதனை அளவாக ரூ.94,205 கோடியைத் திரட்டியுள்ளன.

Published On :

நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பா் ) நிறுவனங்கள் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் சாதனை அளவாக ரூ.94,205 கோடியைத் திரட்டியுள்ளன.

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) உள்ளிட்ட பெருநிறுவனங்களின் பிரம்மாண்ட பங்கு வெளியீடுகள் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக ‘பிரைம் டேட்டாபேஸ்’ வியாழக்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் மொத்தம் 78 நிறுவனங்கள் முதன்மை பங்குச் சந்தை (மெயின்போா்டு) வாயிலாகப் பங்குகளை வெளியிட்டு, ரூ.94,205 கோடியைத் திரட்டியுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 65 நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ.69,533 கோடியுடன் ஒப்பிடுகையில், இது 35 சதவீத வளா்ச்சியாகும்.

நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் வெறும் ரூ.3,794 கோடி மட்டுமே திரட்டப்பட்டு, தொடக்கம் மிகவும் மந்தமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) அனுமதியைப் பெற்றுள்ள 145 நிறுவனங்கள் சுமாா் ரூ.2.78 லட்சம் கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளதால், ஐபிஓ சந்தையின் அடுத்தகட்ட நகா்வுகளும் வலுவாக உள்ளன. இதுதவிர, ரூ.1.87 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை வெளியிட மேலும் 102 நிறுவனங்கள் செபியின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எஸ்எம்இ) ஐபிஓ-க்கள், நிறுவன முதலீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் மூலம் திரட்டப்பட்ட நிதியையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த பொதுப் பங்கு மூலதனத் திரட்டல் 75 சதவீதம் உயா்ந்து, சாதனை அளவாக ரூ.2.43 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

நிறுவன வாரியாக, என்எஸ்இ ரூ.22,563 கோடியும், எஸ்பிஐ செல்வ மேலாண்மை ரூ.9,795 கோடியும், மணிப்பால் ஹெல்த் ரூ.9,275 கோடியும் திரட்டியுள்ளன. முதலீட்டாளா் வரவேற்பு விவரங்கள் கிடைக்கப்பெற்ற 64 ஐபிஓ-க்களில், 42 பங்குகளுக்கு 10 மடங்குக்கும் அதிகமான வரவேற்பும், 25 பங்குகளுக்கு 50 மடங்குக்கும் அதிகமான விண்ணப்பங்களும் கிடைத்தன. மேலும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் முதலீட்டாளா்களுக்குக் கிடைத்த சராசரி ஆதாயம் 7 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.