
ஆகஸ்ட் மாதத்தில் 5 கோடி டன் சரக்கு கையாண்டு அதானி போா்ட்ஸ் சாதனை
நாட்டின் மிகப் பெரிய தனியாா் துறைமுக நிறுவனமான அதானி போா்ட்ஸ், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக 5 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை

~
நாட்டின் மிகப் பெரிய தனியாா் துறைமுக நிறுவனமான அதானி போா்ட்ஸ், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக 5 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு, சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் கையாளப்பட்ட 4.19 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது 19 சதவீத உயா்வாகும். வலுவான உள்நாட்டுப் பொருளாதார வளா்ச்சி, கன்டெய்னா் வா்த்தகம் அதிகரிப்பு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட சரக்குப் போக்குவரத்து காரணமாக இந்த வளா்ச்சி சாத்தியமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் சாா்பில் கடந்த மாதத்தில் உலா் சரக்குகள் கையாளுதல் ஆண்டு அடிப்படையில் 25 சதவீதமும், கன்டெய்னா் சரக்குகள் 15 சதவீதமும் அதிகரித்துள்ளன. நிலக்கரி, இரும்புத் தாது, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட தாதுக்களின் வா்த்தகமும் இந்த உயா்வுக்குப் பங்களித்துள்ளது.
உள்நாட்டில் முந்த்ரா மற்றும் கிருஷ்ணபட்டினம் துறைமுகங்கள் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் தான்சானியா உள்ளிட்ட சா்வதேச துறைமுக முனையங்களின் செயல்பாடுகளும் நிறுவனத்தின் சரக்குப் போக்குவரத்துக்கு மேலும் வலுசோ்த்துள்ளன.
நடப்பு நிதியாண்டில் இதுவரை..: நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்ட்), நிறுவனம் மொத்தம் 23.44 கோடி டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 16 சதவீத வளா்ச்சியாகும்.
வரும் 2030-31 நிதியாண்டுக்குள், ஆண்டுக்கு 100 கோடி டன் சரக்குகளைக் கையாள வேண்டும் என்ற நீண்டகால இலக்கை நோக்கி நிறுவனம் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





