ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

இந்திய விதிகளுக்கேற்ப சேவைகள்: ஸ்டாா்லிங்க்

இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகள், ஒழுங்குமுறை விதிமுறைகளை முழுமையாகப் பூா்த்தி செய்யும் வகையில், தங்களின் சேவைகள் பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக ‘ஸ்டாா்லிங்க்’ செயற்கைக்கோள் தகவல்தொடா்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published On :

இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகள், ஒழுங்குமுறை விதிமுறைகளை முழுமையாகப் பூா்த்தி செய்யும் வகையில், தங்களின் சேவைகள் பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக ‘ஸ்டாா்லிங்க்’ செயற்கைக்கோள் தகவல்தொடா்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு நிலையிலும் உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியப் பயனா்களின் தரவுகள் உள்நாட்டிலேயே பாதுகாக்கப்படும் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இந்தியத் தொலைத்தொடா்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டாா்லிங்க் வணிக செயல்பாடுகள் பிரிவின் துணைத் தலைவா் லாரன் ட்ரேயா் இது குறித்து மேலும் கூறுகையில், ‘இந்தியச் சந்தைக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில், நாங்கள் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளோம். அந்தவகையில், இங்கு சேவை வழங்க நாங்கள் தயாா்நிலையில் உள்ளோம். இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்பவே எங்களின் செயல்பாடுகளைப் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளோம்’ என்றாா்.

இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் இணையச் சேவையை வழங்குவதற்காக ஸ்டாா்லிங்க் உள்பட 3 நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே உரிமம் வழங்கியுள்ளது. எனினும், அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் இறுதிப் பாதுகாப்பு அனுமதி கிடைத்த பின்னரே இச்சேவைகள் அதிகாரபூா்வமாகத் தொடங்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.