இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 548 புள்ளிகளுடனும், நிஃப்டி 22,500 க்கு கீழே சரிவு!

சென்செக்ஸ் 547.65 புள்ளிகள் சரிந்து 71,924.68 புள்ளிகளாகவும், நிஃப்டி 157.10 புள்ளிகள் சரிந்து 22,363.35 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம்

Published On :

மும்பை: கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு, வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி வருவதும் மற்றும் பத்திர வருவாய் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், முக்கிய பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் சுமார் 548 புள்ளிகள் சரிந்தது முடிவடைந்தது.

தொடக்கத்தில் ஏற்பட்ட சிறிய ஏற்றத்தை தக்கவைக்க முடியததால், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 796.23 புள்ளிகள் சரிந்து 71,676.10 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 547.65 புள்ளிகள் சரிந்து 71,924.68 புள்ளிகளை எட்டியது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 157.10 புள்ளிகள் சரிந்து 22,363.35 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் ஐடிசி, டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், லார்சன் & டூப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் எச்சிஎல் டெக் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் டெக் மஹிந்திரா, ஐடிசி, எல்&டி, ஹிண்டால்கோ மற்றும் ஹெச்யுஎல் ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், பஜாஜ் ஆட்டோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், பிஎஸ்இ லிமிடெட் மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. நிஃப்டி மிட்கேப் குறியீடு மாற்றமின்றி முடிவடைந்த நிலையில், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 1.4% உயர்ந்தன.

துறைவாரியாகப் பார்க்கையில், நிஃப்டி மீடியா குறியீடு 4.6 சதவீதமும், ஆட்டோ குறியீடு 0.9 சதவீதமும், ரியல்டி குறியீடு 1 சதவீதம் மற்றும் பார்மா குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்தன. மறுபுறம் நிஃப்டி ஐடி, மேட்டல், தனியார் வங்கி, பொதுத்துறை வங்கி மற்றும் எஃப்எம்சிஜி ஆகிய குறியீடுகள் 0.4 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை சரிந்தன.

பங்குகளைப் பொறுத்தவரை, டெக்னாலஜி டெவலப்மெண்ட் போர்டு உடன் ரூ. 151 கோடி கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டதைத் தொடர்ந்து ஐடியாஃபோர்ஜ் டெக்னாலஜி பங்கின் விலை 10 சதவீதம் உயர்ந்தன. அதே சமயம், அவென்யூ சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தின் 2 வது காலாண்டு முடிவு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7.6% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த போதிலும், அதன் பங்கின் விலை 4 சதவீதத்துக்கும் அதிகமாகச் சரிந்தது.

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், எச்யுஎல், என்டிபிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜூபிடர் வேகன்ஸ், பாட்டா இந்தியா, மெட்பிளஸ் ஹெல்த், ராம்கோ சிமெண்ட்ஸ், டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் தால்மியா பாரத் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வாரக் குறைந்தபட் நிலையை எட்டியது.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ. 3,568.90 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 3.65 சதவீதமும், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடும் சரிவுடன் நிறைவடைந்தது. ஹாங் செங் குறியீடு சற்று உயர்வுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தை உயர்வுடன் வர்த்தகமானது. அமெரிக்க சந்தை வெள்ளிக்கிழமையன்று உயர்வுடன் நிறைவடைந்தன.

சர்வதேச அளவில் 'ப்ரெண்ட்' கச்சா எண்ணெய் 1.14 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 105.8 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Benchmark stock index Sensex dropped by nearly 548 points on Monday dented investor sentiment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.