கச்சா எண்ணெய் விலை 111 டாலராக உயர்வு! 3-வது நாளாக சரிந்து முடிந்த பங்குச்சந்தை!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

பங்குச்சந்தை வர்த்தகம்... - ANI
கடந்த 2 நாள்கள் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்த நிலையில் தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்றும் (அக். 22) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,343.33 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்தில் மாறிமாறி இருந்து வந்தது.
எனினும் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 460.30 புள்ளிகள் (0.62%) சரிந்து 73,249.39 என்ற புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 123.70 புள்ளிகள் (0.54%) குறைந்து 22,687.65 புள்ளிகளில் முடிந்தது.
நிஃப்டி50 குறியீட்டில் நெஸ்லே இந்தியா, எடர்னல், எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி மிட்கேப் 100, நிஃப்டி ஸ்மால்கேப் 100 முறையே 0.87 சதவீதம், 1.17 சதவீதம் சரிந்தன.
துறைவாரியாக, நிஃப்டி ஐடி, எஃப்எம்சிஜி, மீடியா ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன. அதே நேரத்தில் நிஃப்டி பார்மா, பொதுத்துறை வங்கிப் பங்குகள் மட்டும் ஏற்றத்தில் முடிந்தன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் பஜாஜ் பைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, எஸ்பிஐ இன்சூரன்ஸ் உள்ளிட்ட 11 பங்குகள் உயர்வுடனும் இதர பங்குகள் சரிவுடனும் முடிந்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.50 டாலராக முடிந்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் இதுவரை இல்லாத அளவுக்கு 111.80 டாலராக உயர்ந்தது.
உலக போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
Summary
Stock Market Close: Sensex falls 460 pts, Nifty ends at 22,688
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


