ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் உயர்வு! பங்குச்சந்தை உயர்வால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

இன்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தது பற்றி...

Stock market today

பங்குச்சந்தை - ENS

Updated On :

இந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் மாறிமாறி வர்த்தகமாகி வருகின்றன. நேற்று சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள் இன்று (அக். 15) நல்ல லாபத்துடன் முடிந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,965.80 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை முதலே சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,533.72 புள்ளிகள் உயர்ந்து 74,315.61 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 374.65 புள்ளிகள் உயர்ந்து 22,997.35 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி50-ல் டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக லாபமடைந்த நிறுவனங்கள் ஆகும். பாரதி ஏர்டெல், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், மாருதி, ரிலையன்ஸ் பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி மிட்கேப் 0.36 சதவீதம், நிஃப்டி ஸ்மால்கேப் 1.31 சதவீதம் சரிந்தது.

துறைவாரியாக, நிஃப்டி ஐடி அதிகபட்சமாக உயர்ந்தது. அதே நேரத்தில் நிஃப்டி பொதுத்துறை வங்கி பங்குகள் அதிகபட்சமாக சரிந்தன. மீடியா, எஃப்எம்சிஜி உலோகப் பங்குகளும் சரிந்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ட்ரென்ட், பெல் ஆகிய நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனப் பங்குகள் உயர்ந்து முடிந்தன.

கச்சா எண்ணெய் விலை குறைவு, உலக போர்ப் பதற்றம் சற்று தணிந்ததாலும் இன்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமானதாக கூறப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.05 ஆக முடிந்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 103.79 டாலராக குறைந்துள்ளது.

Summary

Stock Market Close: Sensex surges 1,534 pts, Nifty at 22,997 as crude falls 2 percent

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.