மருதி சுசூகி விக்டோரிஸ் காரின் முதலாம் ஆண்டையொட்டி ‘ஆரம் எடிஷன்’ அறிமுகம்!
மருதி சுசூகி விக்டோரிஸ் காரின் முதலாம் ஆண்டையொட்டி ஆரம் எடிஷன் அறிமுகப்படுத்தப்படவுள்ளதைப் பற்றி...

மருதி சுசூகி விக்டோரிஸ்.
மாருதி சுசூகி நிறுவனத்தின் விக்டோரிஸ் கார் அறிமுகமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளதையொட்டி, ‘ஆரம் எடிஷன்’ என்ற அழகுப்படுத்தும் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மாருதி சுசூகி நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாகக் கோலோச்சி வருகிறது. இந்த நிறுவனத்தின் விக்டோரிஸ் ஸ்ட்ராங் ஹைபிரிட் வகை கார்களுக்கு மட்டும் வழங்கப்படும் இந்த அலங்கார தொகுப்பை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 22,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காரின் செயல்திறன், உபகரணங்களில் எந்த மாறுதல்களும் செய்யாமல் இணைக்கும் வகையில் இந்த அலங்காரத் தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விக்டோரிஸ் காரின் சாதனை படைத்த பொன்னான ஆண்டைப் பிரதிபலிக்கும் வகையில், தங்கத்தைக் குறிக்கும் லத்தீன் வார்த்தையின் பெயரான ‘ஆரம்’ என்ற பெயரில் ‘ஆரம் எடிஷன்’ ஆக்சஸரீஸ் கிட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் காரின் முன்புறம், பக்கவாட்டுப் பகுதிகள், பின்புறம் ஆகிய இடங்களில் செம்பு நிற அலங்காரங்களும், பல பகுதிகளில் குரோம் அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன.
விக்டோரிஸ் ஸ்ட்ராங் கார்களின் விலை ரூ.16.43 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் வரை உள்ளது. காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் மின்மோட்டார், பேட்டரி இணைக்கப்பட்டுள்ளன.
தானியங்கி கியர்பாக்ஸ் கொண்ட இந்தக் கார், லிட்டருக்கு 28.65 கி.மீ. மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு செப். முதல் நிகழாண்டு செப்டம்பர் மாதம் வரை 1,47,602 யூனிட் கார்கள் விற்பனையானதாக நிறுவனம் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
Summary
On the model's first anniversary in the Indian market, Maruti Suzuki has introduced the Aurum Edition accessory package for the Victoris midsize SUV. Priced at Rs 22,990, the luxurious kit adds cosmetic enhancements and practical accessories to the SUV without making any changes to its mechanical components or performance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

