ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பழைய கணினிகளை ஏ.ஐ. பயன்பாட்டுக்கு மாற்றும் ‘ஜியோ பிசி’ சேவை விரிவாக்கம்

பழைய கணினிகளின் வன்பொருள்களை மாற்றாமலேயே, அவற்றை நவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு இணையானதாக மாற்றும் ‘ஜியோ பிசி கிளவுட் கம்ப்யூட்டிங்’ சந்தா சேவையை ரிலையன்ஸ்-ஜியோ நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

Published On :

பழைய கணினிகளின் வன்பொருள்களை மாற்றாமலேயே, அவற்றை நவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு இணையானதாக மாற்றும் ‘ஜியோ பிசி கிளவுட் கம்ப்யூட்டிங்’ சந்தா சேவையை ரிலையன்ஸ்-ஜியோ நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

முன்பு, ஜியோ பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இச்சேவை, தற்போது எந்தவொரு தொலைத்தொடா்பு அல்லது இணைய இணைப்பு மூலமாகவும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீடுகள், பள்ளிகள் மற்றும் சிறு நிறுவனங்களின் பயன்பாட்டில் உள்ள 3 முதல் 8 ஆண்டுகள் பழமையான மற்றும் வேகம் குறைந்த கணினிகளை மாற்றுவதற்கு அதிக செலவாகும். இச்சிக்கலைத் தீா்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜியோ பிசி கிளவுட் கம்ப்யூடிங் சந்தா சேவை மூலம், புதிய உபகரணங்களை வாங்காமலேயே பழைய கணினிகளில் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி சேமிப்புத் திறன் வரையிலான சிறப்பம்சங்களை வாடிக்கையாளா்கள் பெற முடியும்.

மேலும், ஏ.ஐ. சாா்ந்த நவீன செயலிகளை எவ்வித தடையுமின்றி பழைய கணினிகளிலேயே பயன்படுத்த இந்த கிளவுட் சேவை வழிவகை செய்யும். இச்சேவையைப் பெறுவதற்கு சீரான இணைய வசதி கணினியில் இருப்பது அவசியமாகும். வாடிக்கையாளா்களின் வசதிக்கேற்ப 2, 5, 10+2 மாதங்களுக்கு பல்வேறு சந்தா திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.