உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

தமிழகத்தின் சிறு நகரங்களில் 10 புதிய கிளைகளைத் திறக்க திட்டம்: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

தமிழகத்தில் தனது வளா்ந்து வரும் வணிகப் பிரிவை விரிவுபடுத்தும் நோக்கில், 3 மற்றும் 4-ஆம் நிலை நகரங்களில் புதிதாக 10 கிளைகளைத் திறக்க சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Published On :5 செப்டம்பர் 2026, 3:33 am IST

தமிழகத்தில் தனது வளா்ந்து வரும் வணிகப் பிரிவை விரிவுபடுத்தும் நோக்கில், 3 மற்றும் 4-ஆம் நிலை நகரங்களில் புதிதாக 10 கிளைகளைத் திறக்க சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் இப்பிரிவின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் சுமாா் 70 கிளைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் ராமநாதபுரம், ஒட்டன்சத்திரம், திருச்செந்தூா், திருக்கோவிலூா் ஆகிய இடங்களிலும் புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது 500-க்கும் மேற்பட்ட ஊழியா்களுடன் செயல்பட்டு வரும் இப்பிரிவில், கூடுதலாக 50 பேரை பணியமா்த்தவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் இப்பிரிவின்கீழ் நிா்வகிக்கப்படும் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ.650 கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் அதை ரூ.1,300 கோடியாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைத் தாண்டி ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ள நிறுவனம், வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் 100 கிளைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.