
ஓட்டுநர் இல்லாத கார்: டெஸ்லாவின் சைபர்கேப் அறிமுகம்!
டெஸ்லா ஓட்டுநர் இல்லாத சைபர்கேப் வாகனத்தை அறிமுகப்படுத்தியது பற்றி..

ஓட்டுநர் இல்லாத கார் - X
அமெரிக்க மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஓட்டுநர் இல்லாத சைபர்கேப் வாகனத்தை அறிமுகப்படுத்தியது.
ஓட்டுநர் இல்லாத சைபர்கேப் கார் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், டெக்சாஸின் ஆஸ்டின் நகரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
டெஸ்லா காரின் சிறப்பம்சங்கள் என்ன?
சைபர்கேப் முழுவதும் தானியங்கி கார். இதில், பட்டாம்பூச்சி வடிவக் கதவுகள், பெரிய தொடுதிரை கொண்ட இரண்டு இருக்கைகள் கொண்ட வாகனமாகும். புதிதாக வெளியிடப்பட்ட ஒரு பயண வழிகாட்டி, இந்த வாகனத்தில் ஸ்டீயரிங் வீல், ஆக்சிலரேட்டர் பெடல், பிரேக் பெடல் என எதுவும் வழங்கப்படவில்லை. இது முழுவதும் தானாகவே இயங்கும் வகையில், ஓட்டுதலுக்கு ஏதுவாக கேமரா மற்றும் சென்சார்களைச் சார்ந்துள்ளது.
இந்த காரில் அவசரமாக நிறுத்தும் பொத்தான்கள் உள்ளிட்ட, அதில் செல்பவர்களால் கட்டுப்படுத்தும் அமைப்புகள் உள்ளன. அதிலுள்ள அபாய விளக்குகளைப் பயன்படுத்தி காரை உடனடியாக நிறுத்த முடியும்.
யுஎஸ்பி - சி போர்ட்கள், கேமரா, கதவு பட்டன்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இருவர் மட்டுமே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரில் இரண்டு பெட்டிகள் வைத்துக் கொள்ளலாம், கால்களைச் சொகுசாக வைத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ரோபோ டாக்ஸி (Robotaxi app) மூலமாக பயனர்கள் இந்தக் காரை எளிதில் புக் செய்யலாம். கார் வந்ததும் பயனர்கள், செயலியை பயன்படுத்தி, காரின் டிக்கியை திறக்கலாம். காருக்கு அருகில் வந்ததும் கதவு தானாகத் திறக்கும். உள்ளே தொடுதிரை உள்ளது.
இருக்கை அமைப்புகளையும், வெப்பநிலையையும் பயனர்களுக்குத் தேவையான வகையில் மாற்றம் செய்து கொள்ளலாம். காருக்குள் பொழுதுபோக்கு வசதிகளுக்காக 22 அங்குல பெரிய தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் இருக்கை உயரமும், பார்வையற்றவர்களுக்கு ஏற்ற பிரெய்லி (Braille) பொத்தான்களும் சிறப்பு வடிவமைப்பாக இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்டினின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்தக் கார் தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் தோராயமான விலை சுமார் 30,000 அமெரிக்க டாலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






