2.5 லட்சம் டன் சர்க்கரையை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் முடிவு!
மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உள்நாட்டுச் சந்தையில் சுமார் 2.5 லட்சம் டன் சர்க்கரையை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் தெரிவிப்பு.

புதுதில்லி: சர்க்கரை விநியோகத்தை அதிகரிக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உள்நாட்டுச் சந்தையில் சுமார் 2.5 லட்சம் டன் சர்க்கரையை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக, ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுஷீல் குமார் தெரிவித்தார்.
உள்நாட்டுச் சந்தையில் சுமார் 2.5 லட்சம் டன் சர்க்கரையை விற்பனை செய்ய நாங்கள் முன்வந்துள்ளோம், என்று 'ஐஎஸ்எம்ஏ' ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சுஷீல் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ், 'ஏஎல்எஸ்' திட்டத்தின் கீழ் கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்கின்றது. பண்டிகைக் காலத்திற்கு முன்னதாகச் சர்க்கரை விநியோகத்தை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 'ஏஎல்எஸ்' திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக உள்நாட்டிலேயே விற்பனை செய்யுமாறு கடந்த மாதம் மத்திய அரசு இந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதால், உள்நாட்டில் சர்க்கரை விலை சரிந்தது.
சக்கரை விலையைக் கட்டுப்படுத்துவதற்கான மற்ற நடவடிக்கைகளுடன், 10 லட்சம் டன் சர்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதே வேளையில், 2025-26 சந்தைப்படுத்தல் ஆண்டிற்கான சர்க்கரை உற்பத்தி மதிப்பீட்டை 343 லட்சம் டன்களிலிருந்து 306 லட்சம் டன்களாகக் குறைத்திருந்த போதிலும், நாட்டில் போதுமான இருப்பு உள்ள நிலையில் ஆலைகள் விலையை அதிகரிப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
Summary
Indian sugar refiners plan to sell around 2.5 lakh tonnes of sugar in the domestic market.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







