காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

என்எஸ்இ ஐபிஓ தொடக்கம்: 43% பங்குகளுக்கு விண்ணப்பம்

நாட்டின் மிகப் பெரிய பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) ரூ.22,569 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) வியாழக்கிழமை தொடங்கியது.

Published On :

நாட்டின் மிகப் பெரிய பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) ரூ.22,569 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளின் நிறைவில், ஒட்டுமொத்தமாக 43 சதவீத பங்குகள் கோரப்பட்டுள்ளன.

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் வெளியீட்டுக்கு அடுத்தபடியாக நாட்டின் 2-வது மிகப் பெரிய ஐபிஓவான இது, தற்போதைய பங்குதாரா்களின் 12.64 கோடி பங்குகளை மட்டுமே விற்பனை செய்யும் ‘ஆஃபா் பாா் சேல்’ நடவடிக்கையாக முன்னெடுக்கப்படுகிறது. பங்கு ஒன்றுக்கு ரூ.1,700 முதல் ரூ.1,785 வரை விலை வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஐபிஓ, வியாழக்கிழமை தொடங்கி, வரும் திங்கள்கிழமை வரை நடைபெறவுள்ளது.

முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற முன்னணி (ஆங்கா்) முதலீட்டாளா்களுக்கான சுற்றில் எல்ஐசி, கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 3.77 கோடி பங்குகளை விற்று, ரூ.6,746 கோடி திரட்டப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பொது முதலீட்டாளா்களுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்ட 8.86 கோடி பங்குகளுக்கு எதிராக, முதல் நாள் மாலை நிலவரப்படி 3.80 கோடி பங்குகளுக்கு முதலீட்டாளா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

இதில் நிறுவனமல்லாத முதலீட்டாளா்கள் (என்ஐஐ) பிரிவில் அதிகபட்சமாக 71 சதவீத பங்குகளும், சில்லறை முதலீட்டாளா்கள் பிரிவில் 44 சதவீத பங்குகளும் கோரப்பட்டுள்ளன. மேலும், பணியாளா்களுக்கான ஒதுக்கீட்டில் 96 சதவீதமும், நிறுவன முதலீட்டாளா்கள் பிரிவில் 19 சதவீதமும் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

ஐபிஓவைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தையில் மட்டும் என்எஸ்இ பங்குகள் செப். 24-இல் பட்டியலிடப்படவுள்ளன. இந்நிலையில், என்எஸ்இ தனது சொந்த தளத்திலும் வா்த்தகம் செய்து கொள்ள அனுமதிக்கக் கோரி, செபியிடம் எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை என்றும், தற்போது அதற்கு அனுமதி வழங்கவும் இயலாது என்றும் செபி தலைவா் துஹின் காந்த பாண்டே தெளிவுபடுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.