தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, வங்கிப் பங்குகள் வீழ்ச்சி!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

Indian stock market

பங்குச்சந்தை - IANS

Published On :

இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் தொடக்க நாளான நேற்று உயர்வுடன் முடிந்த நிலையில் இன்று (செப். 22, செவ்வாய்க்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,901.50 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 154.02 புள்ளிகள் சரிந்து 74,704.97 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37.10 புள்ளிகள் சரிந்து 23,377.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாக இருந்தன.

நிஃப்டி மிட்கேப் 0.11 சதவீதம் உயர்ந்த அதே வேளையில், நிஃப்டி ஸ்மால்கேப் 0.14 சதவீதம் சரிந்தது.

துறைவாரியாக, நிஃப்டி ரியல் எஸ்டேட் பங்குகள் அதிக லாபம் பெற்றது. ஆட்டோ, மீடியா, உலோகம், நிதி சேவைகள் உள்ளிட்ட பங்குகளும் உயர்ந்தன.

நிஃப்டி ஐடி அதிகபட்சமாக சரிந்தது. பார்மா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிப் பங்குகளும் சரிந்து வர்த்தகமாகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வர்த்தக தொடக்கதில் 95.74 என இருந்தது.

Summary

Stock Market today: Sensex falls 100 pts, Nifty below 23,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.