
17% உயர்வு கண்ட ஹீரோ மோட்டார்ஸ் பங்குகள்!
ஹீரோ மோட்டார்ஸின் பங்குகள் தொடக்க வர்த்தகத்தில், மந்தமாக வர்த்தகமான நிலையில், பிறகான வர்த்தகத்தில் மீண்டு சாதனை படைத்தது.

ஹீரோ மோட்டார்ஸ்
புதுதில்லி: வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸின் பங்குகள், தொடக்க நாள் வர்த்தகத்தில், மந்தமாக வர்த்தகமான நிலையில், பிறகான வர்த்தகத்தில் மீண்டு, அதன் வெளியீட்டு விலையான ரூ. 84 ஐ விட 17 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஹீரோ மோட்டார்ஸ், ஐபிஓ கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற இறுதி நாளில் 6.66 மடங்குக்கு சந்தா ஆஃபா் பாா் சேல் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.
ரூ. 1,000 கோடி மதிப்பிலான ஐபிஓ-விற்கான விலை வரம்பு, பங்கு ஒன்றுக்கு ரூ. 79 முதல் ரூ. 84 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மும்பை பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்ட நாளில் அதன் வெளியீடு விலையை விட 2.26 சதவீதம் குறைவான விலையான ரூ. 82.10 க்கு வர்த்தகத்தைத் தொடங்கி, மீண்டு 17.27 சதவீதம் உயர்ந்து ரூ. 98.51 ஆக முடிவடைந்தது.
நிஃப்டி-யில் இந்த பங்கு பட்டியலிடப்பட்ட நாளில், 2.38 சதவீதம் சரிவுடன் ரூ. 82 க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது. ஆரம்பக்கட்ட சரிவிலிருந்து மீண்டு, 17.14 சதவீதம் உயர்ந்து ரூ. 98.40 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 4,474.48 கோடியாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ஹீரோ மோட்டார்ஸ் பங்கின் முந்தைய முடிவு விலையான ரூ. 118.21 ஆக தொடங்கி பிறகான வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ.141.85 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ. 126.59 ஆக இருந்தது.
ஹீரோ மோட்டார்ஸின் 52 வாரம் அதிகபட்ச விலையான இன்று 141.85 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ. 80.50 ஆகவும் இருந்தது.
பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட நிதியில், ரூ. 190 கோடி நிலுவையில் உள்ள கடனை திருப்பிச் செலுத்த அல்லது முன்கூட்டியே அடைக்கப் பயன்படுத்தப்படும். அதே வேளையில், ரூ. 200 கோடி உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்த நகரில் உள்ள நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்குத் தேவையான உபகரணங்களை வாங்கப் பயன்படுத்தப்படும் என்றது.
Summary
Shares of Hero Motors on Wednesday made a muted market debut, but bounced back later and ended over 17 per cent.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






