முதல் நாளிலேயே முழுவதுமான சந்தாவை பெற்ற ஹீரோ மோட்டார்ஸ் ஐபிஓ!

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ் லிமிடெட், அதன் ஐபிஓ வெளியீடு மூலம், முதல் நாளிலேயே முழுமையான சந்தா பெற்றதாக தெரிவித்தது.

ஹீரோ மோட்டார்ஸ்

Published On :

புதுதில்லி: வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ் லிமிடெட், அதன் பங்கு வெளியீடு மூலம், முதல் நாளிலேயே முதலீட்டாளர்களின் பேராதரவால் முழுமையான சந்தா பெற்றதாக இன்று தெரிவித்தது.

ஹீரோ மோட்டார்ஸ், ஐபிஓ-விற்கான பங்கு விலையை பங்கு ஒன்றுக்கு ரூ.79 முதல் ரூ.84 என நிர்ணயித்தது. இந்த வெளியீடு செப்டம்பர் 16 தொடங்கி, செப்டம்பர் 18 அன்று முடிவடையும்.

ரூ. 1,000 கோடி மதிப்பிலான ஐபிஓ, ரூ.600 கோடி மதிப்பிலான புதிய பங்கு வெளியீடு மற்றும் ரூ.400 கோடி மதிப்பிலான விற்பனைக்கான பங்கு வெளியீடு ஆகியவற்றின் கலவையாக அமையும்.

சில்லறை முதலீட்டாளர் பிரிவில் 2.23 மடங்கும், நிறுவனங்கள் சாராத முதலீட்டாளர் பிரிவில் 1.25 மடங்கும் சந்தா பெறப்பட்ட நிலையில், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 1 சதவீத சந்தா பெறப்பட்டது. பங்கு விற்பனையின் முதல் நாளிலே 1.38 மடங்கு சந்தா பெற்றுள்ளதாக ஹீரோ மோட்டார்ஸ் தெரிவித்தது.

புதிய வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட ரூ. 600 கோடியில் ஒரு பகுதியை, கடன் திருப்பிச் செலுத்துவதற்கும் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவன பங்குகள் செப்டம்பர் 23 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The IPO of auto components maker Hero Motors Ltd was fully subscribed on the first day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.