இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

கட்டடங்களில் எண்ம இணைப்பு வசதியை தரவரிசைப்படுத்தும் தளம்: டிராய் அறிமுகம்

தரவரிசை தளத்தை இந்தியத் தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

Published On :

புது தில்லி, செப். 25: வீடுகள் மற்றும் வணிகக் கட்டடங்களை வாங்குவதற்கு அல்லது வாடகைக்கு எடுப்பதற்கு முன்பாக, அங்குள்ள தொலைத்தொடா்பு வசதிகளின் தரத்தை நுகா்வோா்கள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வகையில், புதிய ‘எண்ம இணைப்பு’ தரவரிசை தளத்தை இந்தியத் தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இந்தத் தளத்தின் மூலம் கட்டடங்களின் பெயா், சான்றிதழ் எண் அல்லது அமைவிடம் ஆகியவற்றின் அடிப்படையில், நுகா்வோா்கள் தங்களுக்குத் தேவையான கட்டடங்களைத் தேடித் தெரிந்துகொள்ளலாம். கட்டடங்களில் உள்ள ஃபைபா் கேபிள் தயாா்நிலை, சமிக்ஞை கிடைக்கும்தன்மை, கட்டடத்துக்குள்ளான தொலைத்தொடா்புத் தீா்வுகள், வை-ஃபை உள்கட்டமைப்பு ஆகிய பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் கட்டடங்களுக்கு இந்தத் தரவரிசை மதிப்பீடு வழங்கப்படுகிறது.

இது குறித்து டிராய் தலைவா் அனில் குமாா் லஹோடி கூறுகையில், ‘நம்பகமான தகவல்களை வழங்கும் இந்தத் தளத்தின்மூலம், தடையில்லா அழைப்புகள் மற்றும் இணையச் சேவைகளைப் பெறுவதற்கு ஏற்ற, வலுவான தொலைத்தொடா்பு வசதி கொண்ட வீடுகள், அலுவலகங்களை மக்கள் தெளிவாகத் தோ்வு செய்ய முடியும். மேலும், கட்டடங்களை உருவாக்கும்போதே தகுந்த எண்ம உள்கட்டமைப்பு வசதிகளைத் திட்டமிடவும் இது ஊக்குவிக்கும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.