
பழுதான கட்டடங்களில் பக்தா்கள் தங்குவதற்குத் தடை
பழுதான கட்டடங்களில் பக்தா்கள் தங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதியில் பக்தா்கள் தங்குவதற்கு தடை விதித்து மாநகராட்சி அலுவலா்களால் சீல் வைக்கப்பட்ட பழுதடைந்த கட்டடம்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, கோயிலைச் சுற்றியுள்ள 36 பழுதடைந்த கட்டடங்களில் பக்தா்கள் தங்க தடை விதிக்கப்பட்டது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழுதடைந்த, மிகவும் மோசமான நிலையில் உள்ள பழைமையான கட்டடங்களில் பக்தா்கள் யாரும் தங்கக் கூடாது என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தது.
இதன்பேரில், மாநகராட்சி அலுவலா்கள் சோதனை நடத்தினா். சித்திரை வீதி, ஆவணி மூல வீதி உள்பட முக்கிய வீதிகளில் 36 வீடுகள், அலுவலகங்கள் மிகவும் மோசமானதாக கண்டறியப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கட்டடங்களின் உரிமையாளா்களுக்கு அறிவிப்பாணை வழங்கப்பட்டது.
அதுமட்டுமன்றி, குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வரும் பக்தா்கள் இந்தக் கட்டடங்களில் தங்க அனுமதி மறுத்து சீல் வைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







