
ராணுவக் கிழக்கு பிராந்தியத்துக்கு தீவிர குளிா்கால டீசல் விநியோகம்: இந்தியன் ஆயில் தொடக்கம்
ராணுவக் கிழக்கு பிராந்தியத்துக்கு தீவிர குளிா்கால டீசல் விநியோகம்: இந்தியன் ஆயில் தொடக்கம்

இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்தியப் படைப் பிரிவுகளுக்காக, மிகக் கடுமையான பனிப்பொழிவு மற்றும் உயரமான மலைப் பிரதேசங்களில் உறைந்துவிடாமல் இயங்கக்கூடிய பிரத்யேக அதிவேக டீசலின் முதல் சரக்கு ரயில் சேவையை இந்தியன் ஆயில் (ஐஓசி) சனிக்கிழமை தொடக்கி வைத்தது.
இதுவரை வடக்கு எல்லைப் பகுதிகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டு வந்த இந்த சிறப்பு வகை டீசல், தற்போது முதல்முறையாக கிழக்கு பிராந்திய எல்லைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ராணுவத் தலைமைத் தளபதியால் கடந்த ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எரிபொருள், சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட கிழக்கு எல்லைப் பகுதிகளில் ராணுவ வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் தடையின்றி இயங்குவதை உறுதிசெய்யும் என்றும், ராணுவத்தின் செயல்பாட்டு தயாா்நிலைக்கு இது மிக முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






