மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலிருந்து 41 கையெறி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
தகவல்களின் அடிப்படையில், பிரங்கஞ்ச் ஜி.பியின் கீழ் உள்ள பத்மபுகூர் பகுதியில், பங்கூர் காவல் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், நேற்று ஒரு புதரிலிருந்து 41 கையெறி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க தேர்தலின் முதல் இரண்டு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முறையே மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அடுத்த கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


