இரா.முருகன்
எண்பதுகளில் தமிழ் இலக்கிய உலகம் பெற்ற நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் இரா.முருகன். இன்னும் எழுதமாட்டாரா என ஏங்கவைக்கும் உரைநடை.



எண்பதுகளில் தமிழ் இலக்கிய உலகம் பெற்ற நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் இரா.முருகன். இன்னும் எழுதமாட்டாரா என ஏங்கவைக்கும் உரைநடை. இன்னும் எதையாவது மிச்சம் வைத்திருக்கிறாரா என்று ஆராயத் தோன்றும் தகவல் விவரச் சேர்க்கைகள். இதற்குமேல் ஒன்றுமில்லை என்று தீர்மானம் கொள்ளவைக்கிற மனித மன ஊடுருவல் வித்தை.
கணையாழி, தீபம் என்று தொடங்கி, கல்கி, விகடன் வரை அணிவகுத்த முருகனின் சிறுகதைகள், அவை வெளியான காலத்தில் வாசகர்கள் மத்தியில் உண்டாக்கிய எதிர்வினைகள் விசேஷமானவை. தேர்ந்த வாசகர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக எப்போதும் அவர் இருந்துவந்திருக்கிறார். எழுத்தைச் சங்கீதமாக்குகிற மிகச் சில சாதனையாளர்களுள் அவரும் ஒருவர்.
ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முருகன், பெருமைக்குரிய ‘கதா’ விருது பெற்றவர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதுவரை 28 புத்தகங்கள் எழுதியுள்ளார். சில திரைப்படங்களுக்கு வசனமும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...