அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அத்தியாயம் 23 - குழுவில் மொழி வளம்

நேர்முக்கியத் தேர்வில், இதுதான் முக்கியக் கட்டம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இன்றைய சூழலில், குழுவிவாதம் சூடான விஷயமாக மாறி இருக்கிறது.

Updated On :27 ஜூலை 2015, 11:07 am IST


நேர்முக்கியத் தேர்வில், இதுதான் முக்கியக் கட்டம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இன்றைய சூழலில், குழுவிவாதம் சூடான விஷயமாக மாறி இருக்கிறது.

சென்ற பகுதியில் பார்த்ததைப்போல், முதலில் ஒரு குழு விவாதத்தில் நிறுவனம் முதலில் கவனிப்பது, மொழிவளத்தைத்தான்…

இந்த இடத்தில் மொழி வளம் என்பதைப் பற்றி சிறு விளக்கம் தேவைப்படும்.

ஒரு மொழியில் நாம் சிறப்பாகப் பேச இரண்டு விஷயங்கள் போதும்.

ஒன்று : அந்த மொழியில் அதிகப்படியான வார்த்தைகள் (vocabulary)

இரண்டு : அம்மொழியின் அடிப்படை இலக்கணம்

இது இரண்டு மட்டும் இருந்தால், எந்த மொழியை வேண்டுமானாலும் கையாளலாம். குறைந்தபட்சம், நாம் சொல்ல நினைத்த விஷயத்தையாவது சொல்லிவிடலாம்.

இதில் இன்னொரு விஷயம் தேவைப்படும். அந்த மொழியைப் பேசும் விதம்! அதையும் தெரிந்துகொண்டால் போதும். ஒரு மொழியை சுலபமாகக் கற்றுக்கொண்டு கையாண்டுவிடலாம்.

ஆனால், தமிழும் சரி! ஆங்கிலமும் சரி! வேறு எந்த மொழியாக இருந்தாலும், முழுமையான ஈடுபாடு இருந்தால்தான் பேசமுடியும். அதற்கு, முதலில் தாழ்வு மனப்பான்மையை நன்கு துடைத்து எடுத்துவிட்டு, மனதில் நம்பிக்கையையும், அந்த மொழி பற்றிய பயத்தையும் போக்கிக்கொள்ள வேண்டும்.

ஆனால், இங்கு முக்கியப் பிரச்னையாக இருப்பது, குழு விவாதம் ஆரம்பித்தவுடனேயே, ஒரு சில நபர்கள், ஆங்கிலத்தில் நம்மால் பேச முடியுமா? என்ற பயத்துடன்தான் பிறரிடம் பேச நினைப்பார்கள். அல்லது, நன்கு ஆங்கிலம் பேசுபவர்கள் ஒரு குழுவில் இருந்துவிட்டால் போதும். இவரைவிட நம்மால் சரியாகப் பேச முடியாது என்று ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்வது அல்லது சிறு சிறு வாக்கியங்களாகப் பேசுவது என்று எண்ணத்தைச் சொல்லாமல் செயல்படுவார்கள்.

இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆங்கிலத்தில் பேசுவது என்பதை இன்னும் நம் இளைஞர்கள் ஒரு அறிவாகவே பார்க்கிறார்கள். அதனை ஒரு மொழியாகப் பார்க்கத் தவறி விடுகிறார்கள். பொதுவாக, திடீரென்று ஆந்திராவில் வசிக்க வேண்டிய வாய்ப்பு வந்தால், அங்கு செல்லும்போது, தெலுங்கு தெரியாமல் எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்ற எண்ணம் வரும். பிறகு, கடைகளில், பேருந்தில், பொது இடங்களில் என்று ஒரு சில அடிப்படை வார்த்தைகளைக் கற்றுக்கொண்டுவிடுவோம். பிறகு, நம்மிடம் பேசுபவர்கள் பயன்படுத்தும் வாக்கியங்களை நினைவில் கொண்டு பேசுவோம். இப்படியே, ஆறு மாதத்தில் இருந்து, ஒரு வருடத்துக்குள், தெலுங்கு பேசத் துவங்கிவிடுவோம். ஆனால், தெலுங்கு ஒரு வார்த்தைகூட எழுதப் படிக்கத் தெரியாது.

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். ஆறு இந்திய மொழிகள் சரளமாகப் பேசுவார். ஃபோனில் பேசும்போது, ஏதாவது குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், ஹிந்தியில்தான் எழுதுவார். எனக்கு ஆச்சரியம்! பரவாயில்லையே!! நிறைய மொழி பேசத்தான் தெரியும்னு ஆச்சரியப்பட்டால், நிறைய மொழி எழுதவும் தெரியும்போல இருக்கே? என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாளே, ஒரு தமிழ் வார இதழைக் கையில் எடுத்துக்கொண்டு ஓடி வந்தார். ஒரு கட்டுரையைச் சுட்டிக்காட்டி,

”ஜி! இதுல என்ன எழுதியிருக்கு? கொஞ்சம் படிச்சுச் சொல்லுங்களேன் என்றார்.

அன்றுதான் எனக்குத் தெரியும். அவருக்கு தமிழ் பேசத் தெரியுமே ஒழிய, எழுதப் படிக்கத் தெரியாது. மேலும் அவருக்கு ஹிந்தி மட்டும்தான் எழுதப் படிக்கத் தெரியும்.

இதில் ஒரு அடிப்படை விளங்குகிறது. ஒரு மொழியை பேசக் கற்றுக்கொள்வதுதான் சுலபம், அதற்கு இன்னுமொரு உதாரணம், நாம் சிறுவயது முதல், தமிழை முதலில் அம்மா, அப்பா, உற்றார் மூலம் பேசத்தான் கற்றுக்கொள்கிறோம். பிறகுதான் “அ, ஆ, இ, ஈ” என்று எழுத்துப் பயிற்சி தரப்படுகிறது. ஆனால், ஆங்கிலத்துக்கு மட்டும், முதலில் எழுத்துகள் கற்பிக்கப்பட்டுவிடுகின்றன. அதைக் கற்றுக்கொண்டு, அதில் குறைந்தபட்சம் 300 வார்த்தைகளை மனதுக்குள் ஏற்றிக்கொள்வதற்குள், கல்லூரிப் படிப்பே முடிந்துவிடுகிறது.

பிறகு எப்படிப் பேசுவது? அதுவும் நகரத்தில் படித்த சில இளைஞர்கள் பேசுவதைப் பார்த்த பிறகு, சுத்தமாக ஆங்கிலம் பேசுவது நடுங்க ஆரம்பித்துவிடும். ஆனால், உண்மையில் ஆங்கிலம் பேச வேண்டும் என்று விரும்பினால், குறைந்தபட்சம் 1000 ஆங்கில வார்த்தைகளாவது கற்றுக்கொள்வதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும். அதனைக் கற்றுக்கொள்ள முதலில் செய்ய வேண்டிய விஷயம், ஆங்கிலத்தில் பேசிப் பழகுவது!

Story image

சரியோ, தவறோ? தான் பேசும்போது திருத்தக்கூடிய ஒரு நபரை அருகில் வைத்துக்கொண்டு, தினசரி ஒரு மணி நேரம் பேசிப் பேசிப் பார்த்தால், ஆறு மாதங்களில் யாராக இருந்தாலும் ஆங்கிலம் பேசிவிடலாம். அதை விட்டுவிட்டு ஆங்கிலம் பேச வேண்டுமே என்ற ஆசையில், ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பில் சேர்ந்துவிட்டு, அங்கு தினசரி நோட்டும், பேனாவும் எடுத்துச் செல்வதில் பயனில்லை. எப்போது ‘ஸ்போக்கன்’ என்று சொல்லிவிட்டு எழுத முயற்சிக்கிறீர்களோ, அப்படியானால் அது ஸ்போக்கன் இல்லை ரிட்டன் இங்கிலீஷ்தான்! (WRITTEN ENGLISH) ஆக, பேசிப் பார்த்தால் மட்டுமே, ஆங்கிலத்தில் பேசும் திறன் வளரும்.

இதில் இன்னொரு விவாதத்துக்குட்படும் விஷயம், ‘ஏன் ஆங்கிலம் மட்டும்தான் பேச வேண்டுமா? தமிழில் பேசக்கூடாதா?’

அந்த நிறுவனம் எதை விரும்புகிறதோ அதைப் பேசலாம். சில நிறுவனங்கள் தமிழில் பேசுவதை ஊக்குவிக்கின்றன. ஆனால், நடைமுறை சாத்தியக்கூறாக, தன் ஊழியர் ஆங்கிலத்தில் பேசுவதைத்தான் விரும்புகின்றன. ஏனெனில், இன்றைய உலகமயமாக்கலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தமும் ஆகும்.

மேலும், கல்லூரி வரை, ஆங்கிலத்தைப் பாடமாகவோ, ஆங்கில வழியாகவோ படித்துவிட்டு, அதில் நல்ல மதிப்பெண்களும் பெற்றுவிட்டு, அதில் பேசக்கூடத் தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம் என்று நிறுவனங்கள் நினைப்பதில் தவறில்லை. நாம்தான் அதனை ஒரு மதிப்பெண்ணுக்கான பாடமாகவே பார்த்திருக்கிறோம். வேறு ஒரு மொழியாகப் பார்க்கவில்லை என்று ஆகிவிடுகிறது.

குழு விவாதத்தைப் பற்றி இங்கு எழுத ஆரம்பித்ததும், படித்துவிட்டு, பின்னூட்டம் இடுகிறார்களோ இல்லையோ, சில நண்பர்கள், எனக்கு நேரடியாக அலைபேசியில் அழைத்து, தங்கள் நிறுவனங்களில் நடந்த குழு விவாதக் காமெடிகளை பகிர்ந்துகொண்டார்கள். மேலும் சிலர் குழு விவாதத்தின்போது தாங்கள் என்ன கவனிப்போம் என்பதையும், அங்கு வரும் நபர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்பதையும் நிறையச் சொன்னார்கள். அவற்றில் சில மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன.

ஒரு குழு விவாதத்தில் இப்படித் தலைப்பு கொடுத்தார்கள்.

FILMS ARE CORRUPTING OUR YOUTH

பங்கேற்பாளரில் ஒருவர் மட்டும், இந்தத் தலைப்பை,

FILMS ARE CORRECTING OUR YOUTH என்று புரிந்துகொண்டிருக்கிறார்.

பிறகுதான் வேடிக்கையே…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.