ஆசனம் 10. திரிகோணாசனம்
உடலை மூன்று பக்கங்களிலும் வளைத்துச் செய்யக்கூடிய ஆசனங்கள் உண்டு. முன்பக்க வளைவு, பின்பக்க வளைவு, பக்கவாட்டு வளைவு

சீர்காழி திருக்கோயில்.
இருட்டிவிட்டது.
தெப்பக் கரையில் அமர்ந்து கோபுரத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் கமலாம்பாள்.
வயது தொண்ணூறைத் தாண்டிவிட்டது. எண்ணெய் போட்டு வாரிய கருங்கூந்தல். கண்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, இடையிடையே சில நரைகள். சிவந்த மேனிக்கு, ஜரிகை போட்ட காபித்தூள் நிறச் சேலையும் வெள்ளை நிற ஜாக்கெட்டும் பொருத்தமாக இருந்தன. கருவிழிகள், புது கோலிக்குண்டுகள்போல பிரகாசித்துக்கொண்டிருந்தன.
உன்னைவிட்டுப் போகமுடியாது என்று உடலோடு வைராக்கியமாக ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரோடு, உதடுகளில் ஒட்டிகொண்டிருக்கும் நிரந்தரப் புன்னகை.
அத்தனைக்கும் கமலாம்பாளிடம் ஒரு காரணம் இருக்கிறது!
ராக்கால பூஜை மணி ஒலித்த பிறகுதான் வீட்டுக்குச் செல்வாள்.
மடப்பள்ளித் திண்ணையில் இரண்டு பேர் கமலாம்பாளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“தெனமும் இந்தப் பாட்டி ஆறு மணிக்கு வந்தா ஒன்பது மணி வரைக்கும் குளக்கரையிலேயே உட்காந்து கெடக்காங்களே. வேற வேலை இல்லையா? வீட்ல தேடமாட்டாங்களா?”
மதுரை மணி அய்யரிடம் கிட்டு அய்யர் கேட்டார்.
மதுரையிலிருந்து ஒரு வைத்தியத்துக்காக சீர்காழி வந்திருக்கும் மணி அய்யர், கிட்டு அய்யரின் உறவுக்காரர். ஒருவாரமாக சீர்காழி கோயிலுக்கு வந்துபோவதால், கமலாம்பாளைக் குறிப்பிட்டு அப்படிக் கேட்டார்.
அப்போதுதான் கிட்டு அய்யருக்கு மூளையில் உரைத்தது.
“ஐயோ மறந்தேபோச்சே. நீ லிவர் ட்ரீட்மென்ட்டுக்கு பேசாமே அவாகிட்டயே போலாமே. ச்சே, முதல்லியே நினைவுக்கு வராம போயிடுச்சே. ஆமாம் மணி, நீ சீர்காழி ஸ்பெஷலிஸ்ட்டை பார்க்க வந்ததும் ஒருவகையில நல்லதா போச்சு. நாளைக்குக் காத்தாலயே கமலாம்பாளைப் போய்ப் பாரு”.
“எதுக்கு? என்னை என்ன பாட்டி வைத்தியம் பார்த்துக்கச் சொல்றேளா. அதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதண்ணா!”
‘‘அதெல்லாம் கிடையாது. எல்லா வைத்தியத்தையும் மிஞ்சின வைத்தியத்தை அவா கையில வைச்சிருக்கா. பார்த்தா தெரியல? தொண்ணூறு வயசுலயும் எவ்வளவு சுறுசுறுப்பா இருக்கா பாரு.
“அட, ஆமாம். என்ன காரணம்?”
“கமலாம்பாள் தெனமும் தவறாம யோகா செய்யறாங்க. அது ஊருக்கே தெரியும். இதுவரைக்கும் ஒருதடவைகூட டாக்டர தேடிப் போனதில்ல. பாவம், அந்த அம்மாளுக்கு குடும்பத்துல சில சோதனைகள். யாரும் கூட இல்லை. தனியாதான் இருக்காங்க. யாராச்சும் விரும்பிக் கேட்டா யோகா சொல்லித் தருவாங்க. உன்னோட ப்ராப்ளத்துக்கு அவங்ககிட்டதான் பர்மனென்ட் ரிசல்ட் கிடைக்கும்னு எனக்குத் தோண்றது’’.
சொல்லும்போதே, ராக்கால பூஜை கோபுர மணியும் சுபசகுனம்போல ஒலித்தது.
மறுநாள் -
காலை எட்டு மணிக்கே கமலாம்பாள் வீட்டில் மணி அய்யர் ஆஜரானார். கிட்டு அய்யர் அனுப்பிய விவரத்தைச் சொன்னதும், சிரித்த முகத்துடன் வாங்க வாங்க என்று வரவேற்றாள் கமலாம்பாள்.
வியப்போடு உள்ளே நுழைந்த மணி அய்யர், சுற்றுமுற்றும் பார்த்தார். சுவரில் பலரது புகைப்படங்கள், பூவோடு காட்சியளிப்பதைக் கண்டு முகம் சுளித்தார். படத்தில் உள்ள அனைவருக்குமே சின்ன வயது! அதுதான் அவருக்குக் குழப்பம்.
“என்ன விஷயம்?” - கமலாம்பாள்.
“நேக்கு கல்லீரல்ல ஒரு ப்ராப்ளம் மாமி. டாக்டர்ஸ் உடனே ஆபரேஷன் பண்ணியாகனும்னு சொல்லிட்டா. அஞ்சு லட்ச ரூபா ஆகுமாம். நேக்கு அவ்ளோ வசதி இல்ல. சீர்காழில ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருக்காரு; மருந்து மாத்திரையிலயே குணப்படுத்திடுவார்னு சொன்னாங்க. அதான் இங்க வந்து கிட்டு அய்யர் வீட்டுல தங்கியிருக்கேன். அவர் எனக்கு ஒண்ணுவிட்ட சகலை. வந்து ஒரு வாரம் ஆச்சு. மருந்து மாத்திரைகள் சாப்பிண்டிருக்கேன். இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நாளையோட ட்ரீட்மென்ட் முடியறது. நேத்துதான் உங்களைப் பத்தி கிட்டு அய்யர் சொன்னார். நீங்க பல வருஷமா யோகா செய்யறீங்களாமே. என்னோட பிரச்னைக்கு யோகாவுல தீர்வு இருக்கா?”
“என்ன அப்படி கேட்டுட்டீங்க. எல்லா பிரச்னைக்கும் யோகாவுல தீர்வு இருக்கு. வீடு தேடி வந்து கேட்டிருக்கீங்க. கொஞ்சம் இருங்க, வீட்டு வேலைகளை முடிச்சுட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே மறைந்தாள் கமலாம்பாள்.
கமலாம்பாள் திரும்பி வந்தபோது, மணி அய்யர் சுவற்றில் இருந்த படங்களை அருகில் போய் நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்குள் ஒரு உறுத்தல். அதைப் பார்வையாலேயே புரிந்துகொண்டாள் கமலாம்பாள்.
“தப்பா எடுத்துக்காதீங்க. இந்தப் படங்கள்ல இருக்கறவங்கள்லாம் யாரு. இப்ப உங்ககூட யாருமே இல்லையா? இவங்க யாருக்குமே அவ்வளவு வயசான மாதிரி தெரியலையே. என்ன ஆச்சு…?”
கமலாம்பாள் வேதனையோட சொல்லத் தொடங்கினாள்.
“அதோ அந்த ஃபோட்டாவுல இருக்கறவரு என்னோட வீட்டுக்காரரு. அவருக்கு ஹார்ட்ல ப்ராப்ளம். தெனமும் யோகா பண்ணுங்கன்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். கேக்கல. ரெண்டாவது அட்டாக்லயே எங்கள அம்போன்னு விட்டுட்டு போயிட்டாரு.
‘‘அடுத்த படத்துல இருக்கறது என்னோட பெரிய பையன். ரேஸ் பைக் வேணும்னு கேட்டான். வாங்கிக்குடுத்தேன். எதிலயும் அவசரம். அந்த அவசரத்தோடவே ஆக்ஸிடென்ட்ல செத்துப்போயிட்டான்.
‘‘இதோ இவ, என்னோட மூத்த பொண்ணோட மகள். என்கிட்டதான் வளர்ந்தா. காலேஜுக்கு போனதுமே காதல் கீதல்னு பினாத்த ஆரம்பிச்சுட்டா. ஒழுங்கா யோகா பண்ணி, மனசை கன்ட்ரோல் பண்ணிக்கோன்னு சொன்னேன். ஆனா கேக்கல. அவன்கூடவே ஓடிப்போயிட்டா. என்ன நடந்துச்சின்னே தெரியல. ரெண்டே மாசத்துல பொணமா கொண்டுவந்து போட்டுட்டுப் போயிட்டாங்க”.
கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.
‘‘இந்தக் கொடுமைய எல்லாம் பார்த்துட்டு நான் இன்னும் உயிரோட இருக்கணுமான்னு கடவுள்கிட்ட கேட்டுக்கிட்டிருக்கேன். அறுவது வருஷத்துக்கு முன்னால யோகா கத்துக்கிட்டேன். அதோட அருமை தெரிஞ்சதால தெனமும் பண்றேன். இப்போதைக்கு அது என்னையும் விடாது, நானும் விடமாட்டேன். அது ஒண்ணுதான் இப்ப எனக்கு துணையா இருக்கு. இந்த உடம்புல உயிர் இருக்கறவரைக்கும் யோகா பண்ணிட்டே இருக்கனுன்னு ஒரே குறிக்கோள்”.
மணி அய்யர் கண்கள் குளமாகச் சிலையாக நின்றார்.
குறிக்கோள் மீது இறுதி வரை பிடிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் தாரணை.

ஆசனம் 10

திரிகோணாசனம் (முன்பக்க வளைவு)

உடலை மூன்று பக்கங்களிலும் வளைத்துச் செய்யக்கூடிய ஆசனங்கள் உண்டு. முன்பக்க வளைவு, பின்பக்க வளைவு, பக்கவாட்டு வளைவு என்று மூன்று வகை வளைவுகளைக் கொண்ட ஆசனங்கள் மூன்று உள்ளன. அவற்றில், இப்போது நாம் காணப்போவது முன்பக்க வளைவுத் திரிகோணாசனம்.

செய்முறை

கால்கள் இரண்டையும் அகலமாக வைத்து நிற்கவும்.

பின்னர் இரண்டு கைகளயும், சுவாசத்தை உள்ளிழுத்தவாறு, இரண்டு பக்கமாக மேலே தூக்கி விரித்து நிறுத்தவும்.

அடுத்து, சுவாசத்தை வெளியிட்டபடி, குனிந்து வலது கையை மட்டும் கீழ் நோக்கிக் கொண்டுவந்து, இடது காலின் விரல்கள் மீது வலது கை விரல்கள் படுமாறு வைக்கவும். அதேசமயம், இடது கையை நன்றாக மேலே உயர்த்தி நீட்டவும்.

குனிந்த நிலையில், முகத்தை இடதுபக்கமாக மேல்நோக்கித் திருப்பிய நிலையில், கண்களால் மேலே நீட்டப்பட்டிருக்கும் இடது உள்ளங்கையை உற்றுப் பார்க்கவும்.

அதே நிலையில், இயன்ற அளவு சுவாசிக்கவும்.

பின்னர், சுவாசத்தை உள்ளிழுத்தவாறு, வலது கையை மேலே உயர்த்தியபடியும், இடது கையை கீழே தாழ்த்திக்கொண்டும் வரவும். உடலை நேராக வைத்து, இரண்டு கைகளையும் தொங்கவிட்டு ஓய்வு எடுக்கவும்.

இதேபோல், கைகளை மாற்றிச் செய்யவும்.

கைகளை மாற்றி மாற்றி பத்து முறை செய்யவும்.

பலன்கள்

முதுகுத்தண்டு இடது பக்கமாகவும், வலது பக்கமாகவும் கீழ்ப்பக்கமாகத் திருகப்படுவதால், நுரையீரல்கள் சரிந்த நிலையில் நிறைய காற்றை உள்ளிழுக்கின்றன இதனால், நுரையீரல்களின் அடிப்பாகத்தில் உள்ள அசுத்தக் காற்று முழுமையாக வெளியேற்றப்படுகிறது.

கருவிழிகளை மேல்நோக்கித் திருப்பிப் பார்ப்பதால், கண்களுக்கு ரத்த ஓட்டம் முழுமையாகக் கிடைத்து, பார்வைப் புலன் கூர்மையாகிறது.

காதுகளின் உட்பகுதிக்கு நுட்பமான முறையில் ரத்தம் பாய்வதால் செவிப் புலன் செம்மையாகிறது.

கல்லீரல், மண்ணீரல் திருக்கப்படுவதால், செரிமான உறுப்புகள் புத்துணர்வு பெறுகின்றன.

சர்க்கரை நோய் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...