மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அறியாமையே இன்பம்?

பத்துப் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர், எனக்கு "காட்ராக்ட்' ஆபரேஷன் நடந்தது. இன்று காலம் மிகவும் மாறிவிட்டது.

News image
Updated On :28 செப்டம்பர் 2014, 10:20 pm

பத்துப் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர், எனக்கு "காட்ராக்ட்' ஆபரேஷன் நடந்தது. இன்று காலம் மிகவும் மாறிவிட்டது. காட்ராக்ட் எனப் பேச்சுவாக்கில் சொன்னாலே, "யார் டாக்டர்? எந்த லென்ஸ்? கட்டணம் எவ்வளவு?' என்று கேள்விகள் எழுப்புகிறார்கள், "அந்த ஆஸ்பிடலா?'' என்று இழுத்து, "என் மாமனாருக்கு அங்கு பண்ணி சரி ஆகலை!' என்று கூறுகிறார்கள். வேறு சிலரோ "டாக்டர்தான் முக்கியம்! கிளினிக் முக்கியமில்லை' என்று பொன்மொழி உதிர்க்கிறார்கள். அந்த அளவுக்கு ஊடகம், செவி வழிச் செய்தி போன்றவற்றால் பல விஷயங்கள் தெரிய வருகின்றன. ஒரு சில அச்சுறுத்தவும் செய்கின்றன.

சரி போகட்டும். அறுவை சிகிச்சை என்றால் - என்னதான் சின்னதாக இருந்தாலும் - லேசான பயம் எழும்புவது இயற்கைதான். ஆனால் வயிற்றுவலிக்குக்கூடப் பீதி அடைந்து, பலரை விசாரித்துக் குழப்பிக் கொண்ட ஒரு பெண்மணியை நான் அறிவேன். அவருக்கு வயிற்றில் வலி தொடர்ந்து இருந்து வந்தது. அவரைப் பரிசோதித்த டாக்டர் - அவர் கார்டியாலிஜிஸ்ட்டும் கூட - மாத்திரைகளை மாற்றி மாற்றித் தந்தார். அப்படியும் முழுமையான குணம் ஏற்படவில்லை. "ஒரு "எக்கோ' எடுத்து விடலாமே?' என்றார்.

"எக்கோ' எடுத்தார். அதன் "ரிசல்ட்' விவரங்கள் அடுத்த நாள் மாலையில் கிடைத்தது. அதில் டழ்ங்ஸ்ரீஹழ்க்ண்ஹப் ங்ச்ச்ன்ள்ண்ர்ய் என்கிற பதத்துக்கு நேராக, கொஞ்சம் "அப்நார்மல்' என்று போட்டிருந்தது, அவ்வளவுதான். அந்தப் பெண்மணியின் பையன் வலைதளத்தில் தேடி, என்னென்னவோ சொல்லிக் கலக்கி விட்டான், பெண்மணியும் தன் பங்குக்கு, வேறு ஓர் உறவுக்கார டாக்டரிடம் விசாரித்தார். உள்ளூரில் பல நண்பர்களிடம் விசாரிப்புகள்... செவி வழிச் செய்திகள்... டாக்டரைச் சந்திக்கும் வரையில், ஒரே கவலைதான்.

குறிப்பிட்ட தினத்தன்று டாக்டரைப் பார்த்து ரிப்போர்ட்டைக் காண்பித்தார். அவர் வெகு இயல்பாக "ஒன்றுமில்லை... கவலை வேண்டாம்... வேறு மாத்திரை தருகிறேன்' என்று சீட்டு எழுதித் தந்தார். பெண்மணியின் கணவர் விடாப்பிடியாக, அப்நார்மல் என்றிருந்ததை சுட்டிக்காட்டினார்.

"அது கம்ப்யூட்டர் ரிப்போர்ட். இவங்க வயதுக்கு இது சாதாரணம்!' என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். இப்போது அந்தப் பெண்மணி, டாக்டர் பரிந்துரை செய்த மருந்து மாத்திரைகளை உட்கொண்டு நன்கு வீட்டில் வளைய வருகிறார். காலையில் "வாக்கிங்' செல்கிறாள்.

இந்தப் பெண்மணியின் மனநிலைக்கு முற்றிலும் மாறுபட்ட மன நிலையிலிருந்த நண்பர் ஒருவரின் அனுபவம் வேறு மாதிரியானது. அவர் தென் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, திடீரென்று சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு சென்றார். சில பரிசோதனைகள் எடுத்த பின், ஆபரேஷன் அவசியம் என்று சிறப்பு நிபுணர் கருதினார். ஆனால், அதற்கு முன்பாக, "தொற்று' (ண்ய்ச்ங்ஸ்ரீற்ண்ர்ய்) குறைய சில மாத்திரைகள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டுமென்று பணித்தார். நண்பர் மாத்திரைகளை சாப்பிட்டார். அறுவை சிசிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது.

தொலைபேசியில் நான் பேசினபோது "பிரபலமான ஹாஸ்பிடல். நல்ல டாக்டர். பிள்ளை,மருமகள், பேத்தி எல்லோரும் வந்திருக்கிறார்கள். ரெஸ்ட் எடுக்கறேன்' என்றார். கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஆன பின், நடமாடும் நிலைமைக்குத் திரும்பினார்.

அந்த நண்பர் இயல்பிலேயே அவ்வளவாகப் பதட்டப் படாதவர்; குடும்பச் சூழலும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். என்றாலும், பழைய காலம் மாதிரி, பல விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலிருப்பது உசிதமல்ல. குறிப்பாக - உத்தியோகம், வங்கி, காப்பீடு சிக்கல்கள், அரசாங்க வரி சமாசாரங்கள் இவற்றைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு, நடைமுறை உலகுக்கு ஏற்ப "ஒட்ட ஒழுகுவது' நலம். இல்லாவிட்டால், நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

இன்று எல்லா மருத்துவர்களும் சமீபத்திய தொழில்நுட்பங்களையும், மருந்து மாத்திரைகள் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார்கள். வலைதளமும், மருத்துவ பிரதிநிதிகளும் உதவுகிறார்கள். மேலும் சிகிச்சை ஆளுக்கு ஆள் மாறுபடக் கூடியது. வயது, பழைய சரித்திரம், எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள், ஒவ்வாமை - போன்ற பல கூறுகளை அலசி ஆராய்ந்து சிகிச்சை மேற்கொள்ளுகிறார்கள். எனவே, மருத்துவ விஷயத்தில் "அறியாமையே இன்பம்' என்று குறிப்பிடலாமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.