ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 4 – போற்றித் திரு அகவல் 7

சிவபெருமானின் பெருமைகளைப் போற்றும் அகவல் பா இது. தில்லையில் அருளப்பட்டது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2015, 11:15 am

என்.சொக்கன்

28

பாடலின்பம்

தாளி அறுகின் தாராய் போற்றி,

நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி,

சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி,

சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி,

மந்திர மாமலை மேயாய் போற்றி,

எம்தமை உய்யக்கொள்வாய் போற்றி,

புலி முலை புல்வாய்க்கு அருளினை போற்றி,

அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி,

கரும்குருவிக்கு அன்று அருளினை போற்றி,

இரும்புலன் புலர இசைந்தனை போற்றி,

படிஉறப் பயின்ற பாவக போற்றி,

அடியொடு நடு, ஈறு ஆனாய் போற்றி,

நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல்

பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி,

ஒழிவுஅற நிறைந்த ஒருவ போற்றி,

செழுமலர்ச் சிவபுரத்து அரசே போற்றி,

கழுநீர் மாலைக் கடவுள் போற்றி,

தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி,

பிழைப்பு, வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்,

குழைத்த சொல்மாலை கொண்டு அருள் போற்றி,

புரம் பல எரித்த புராண போற்றி,

பரம் பரம் சோதிப் பரனே போற்றி,

போற்றி போற்றி புயங்கப் பெருமான்

போற்றி போற்றி புராண காரண

போற்றி போற்றி சயசய போற்றி,

பொருளின்பம்

தாளிக்கொடி, அறுகம்புல்லால் தொடுத்த மாலையை அணிந்தவனே, உன்னை வணங்குகிறோம்,

பெரிய ஒளி வடிவமான கூத்தனே, சந்தனக் குழம்பை அணிந்த அழகனே, சிந்தனைக்கு எட்டாத சிவமே, வேதங்களை விளக்குவதற்காக மகேந்திர மாமலைமீது வீற்றிருப்பவனே, உன்னை வணங்குகிறோம்,

நாங்கள் உய்யுமாறு எங்களை ஆள்பவனே, புல் தின்னும் மானுக்குப் புலியின் தாய்ப்பாலை அருளியவனே, அலைகடல்மீது நடந்தவனே, கருங்குருவிக்கு அருளியவனே, பெரிய ஐந்து புலன்களும் கட்டுப்படுமாறு எங்களுக்கு அருள் செய்ய ஒப்புக்கொண்டவனே, உன்னை வணங்குகிறோம்,

என்னை ஆட்கொள்வதற்காக பூமிக்கு வந்த தூயவனே, முதல், நடு, நிறைவு என அனைத்துமாக இருப்பவனே, பாண்டிய மன்னன் நரகம், சுவர்க்கம், பூமி என எங்கும் செல்லாமல் வீடுபேறு பெற அருள் செய்தவனே, நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் ஒப்பற்றவனே, உன்னை வணங்குகிறோம்,

செழுமையான மலர்கள் நிறைந்த சிவபுரத்தின் தலைவனே, செங்கழுநீர் மாலைகள் அணிந்த கடவுளே, தொழுகிறவர்களுடைய அறியாமை மயக்கத்தை நீக்குபவனே, எது பிழை, எது சரி என்று எதுவும் தெரியாத நாய்போன்ற நான் உள்ளம் நெகிழ்ந்து சொற்களால் தொடுத்த மாலையை ஏற்றுக்கொண்டு அருள் செய்பவனே, உன்னை வணங்குகிறோம்,

முப்புரங்களையும் எரித்த பழைமையானவனே, பிரபஞ்சத்துக்கு அப்பால் இருக்கும் ஆத்ம ஜோதி சொரூபமான மேலானவனே, பாம்பை அணிந்த பெருமானே, புராணனே, அனைத்துக்கும் காரணமானவனே, வெற்றி வடிவானவனே, உன்னை வணங்குகிறோம்,

சொல்லின்பம்

தாராய்: தார் அணிந்தவனே/ மாலை அணிந்தவனே

நிருத்தா: நடனமாடுபவனே/ கூத்தனே

சாந்து: குழம்பு

சுந்தரன்: அழகன்

மேயாய்: மேலிருப்பவன்

புல்வாய்: புல் உண்ணும் மான்

மீமிசை: மேலே

இரும்: பெரிய/ சிறந்த

படி: பூமி

பாவக: தூய்மையானவன்

ஈறு: நிறைவு

நானிலம்: மண்ணுலகம்

பரகதி: வீடுபேறு

ஒருவன்: தனக்கு இணை இல்லாதவன்

மையல்: மயக்கம்

துணிப்பாய்: துண்டிப்பாய்/ வெட்டுவாய்

பிழைப்பு: தவறு செய்தல்

புராண: பழைமையானவன்

சய: ஜய/ வெற்றி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.