பகுதி 5 – திருச்சதகம் 7
சதகம் என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.


சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.
திருச்சதகத்தின் ஏழாவது பிரிவு, 'காருணியத்து இரங்கல்'.
இறைவன் தன்னை ஆளவேண்டும் என்று உருகி வேண்டுதல்பற்றிய பாடல்கள் இவை.
பாடலின்பம்
தரிக்கிலேன் காய வாழ்க்கை,
சங்கரா போற்றி, வான
விருத்தனே போற்றி, எங்கள்
விடலையே போற்றி, ஒப்புஇல்
ஒருத்தனே போற்றி, உம்பர்
தம்பிரான் போற்றி, தில்லை
நிருத்தனே போற்றி, எங்கள்
நின்மலா போற்றி போற்றி!
*
ஒருவனே போற்றி, ஒப்புஇல்
அப்பனே போற்றி, வானோர்
குருவனே போற்றீ, எங்கள்
கோமளக் கொழுந்து போற்றி,
'வருக' என்று என்னை நின்பால்
வாங்கிடவேண்டும் போற்றி,
தருக நின் பாதம் போற்றி,
தமியனேன் தனிமை தீர்த்தே.
பொருளின்பம்
சிவபெருமானே,
இந்த உடலாகிய சுமையை என்னால் இனிமேலும் தாங்க இயலாது,
சங்கரா, உன்னை வணங்குகிறேன், வானத்துத் தேவர்களைவிட மேலானவனே, உன்னை வணங்குகிறேன், எங்கள் இளைஞனே, உன்னை வணங்குகிறேன், ஒப்பு இல்லாத தனித்துவமான தலைவனே, உன்னை வணங்குகிறேன், தேவர்களின் தலைவனே, உன்னை வணங்குகிறேன், தில்லையில் நடனமாடுபவனே, உன்னை வணங்குகிறேன், எங்களை ஆளும் தூய்மையான பெருமானே, உன்னை வணங்குகிறேன்,
தனித்துவமானவனே, உன்னை வணங்குகிறேன், இணை என்று யாரையும் சொல்ல இயலாத எங்கள் அப்பனே, உன்னை வணங்குகிறேன், தேவர்களுக்குக் குருவானவனே, உன்னை வணங்குகிறேன், எங்களுடைய இளமை அழகே, உன்னை வணங்குகிறேன்,
'வா' என்று சொல்லி என்னை அழைத்து நீ உன்னிடம் சேர்த்துக்கொள்ளவேண்டும், உன்னை வணங்குகிறேன், உன்னுடைய பாதங்களைத் தா என்று கேட்டு வணங்குகிறேன், அதன்மூலம் தனிமையில் இருக்கும் என்னுடைய தனிமையைப் போக்கி அருளவேண்டும் என வணங்குகிறேன்,
சொல்லின்பம்
தரித்தல்: தாங்குதல்
காயம்: உடல்
விருத்தன்: மேன்மையானவன்
விடலை: இளமையானவன்
ஒருத்தன்: தனித்துவமானவன்
உம்பர்: வானோர்கள்/ தேவர்கள்
தம்பிரான்: அவர்களின் தலைவன்
நிருத்தன்: நடனமாடுபவன்
நின்மலன்: தூய்மையானவன்
கோமளம்: அழகு
தமியன்: தனிமையில் உள்ளவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...