பகுதி 5 – திருச்சதகம் 9
சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.


சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.
திருச்சதகத்தின் ஒன்பதாவது பிரிவு 'ஆனந்த பரவசம்'.
சிவானந்தம் என்கிற பேரின்ப வெள்ளத்தில் திளைப்பது பற்றிய பாடல்கள் இவை.
பாடலின்பம்
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய்,
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார்,
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம்
பிச்சைத் தேவா, என் நான் செய்கேன்? பேசாயே!
*
யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்,
ஆனால், வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே,
தேனே, அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும்
மானே, அருளாய், அடியேன் உனை வந்து உறுமாறே!
பொருளின்பம்
திருவாரூரில் எழுந்தருளியவனே, பிச்சைக்கோலம் கொண்ட என் தேவனே,
இந்த உலகத்தில் பொய் என்பது அழிந்துவிடக்கூடாது என்பதற்காக, பொய்யின் விதையாக என்னை இங்கே பிறக்கவைத்தாய்,
உன்னால் விரும்பப்படும் அடியவர்கள் எல்லாரும் உன்னுடைய திருவடிகளைச் சேர்ந்துவிட்டார்கள், நான் என்ன செய்வேன்? பயத்தில் மூழ்கிக் கிடக்கிறேன், பதில் சொல்லி எனக்கு வழிகாட்டுவாய்!
நான் பொய், என் நெஞ்சு பொய், நான் உன் மீது வைத்திருப்பதாகச் சொல்லும் அன்பும் பொய்,
ஆனால், பிழை செய்தவனாகிய நான்கூட, மனம் உருகி அழுதால் உன்னைப் பெறலாமா?
தேனே, அமுதே, கரும்புச்சாறின் தெளிவே, இனிக்கின்ற பெருமானே, நான் உன்னை வந்துசேர்வதற்கு அருள் செய்வாய்!
சொல்லின்பம்
விச்சு: வித்து/ விதை
வந்துறுமாறு: வந்துசேரும்படி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...