ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 5 – திருச்சதகம் 10

சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2015, 10:18 am

என்.சொக்கன்

சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.

திருச்சதகத்தின் பத்தாம் பிரிவு, 'ஆனந்தாதீதம்'.

சிவானந்தப் பேரின்பம் பெருகும் நிலையைச் சொல்லும் பாடல்கள் இவை.

38

பாடலின்பம்

மாறு இலாத மாக் கருணை வெள்ளமே,

வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை

வேறு இலாப் பதப் பரிசு பெற்ற நின்

மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்,

ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து

ஒளி செய் மானுடமாக நோக்கியும்

கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன்,

கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே!

*

மன்ன, எம்பிரான், வருக என் எனை,

மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும்

முன்ன எம்பிரான், வருக என் எனை,

முழுதும் யாவையும் இறுதி உற்றநாள்

பின்ன எம்பிரான், வருக என் எனை,

பெய்கழல்கண் அன்பாய் என் நாவினால்

பன்ன எம்பிரான், வருக என் எனை,

பாவநாச, நின் சீர்கள் பாடவே!

பொருளின்பம்

மாறுபாடு இல்லாத சிறந்த கருணை வெள்ளமே,

உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் பரிசு எனப் பெற்ற மெய்யான அடியவர்கள் உன்னுடைய மெய்ம்மைத்தன்மையை அடைந்தார்கள்,

இறுதி என்பதே இல்லாத நீ, எளிமையானவனாக வந்து, ஒளி நிறைந்த மனித வடிவாக நின்றாய், எனக்கு அருள் செய்தாய்,

ஆனாலும், என் உள்ளம் உடையவில்லையே, இந்த நாய் போன்றவனுடைய கீழ்மையை என்னவென்று சொல்வது!

எங்கள் அரசே, எங்கள் தலைவா, என்னை 'வா' என்று அழைத்து ஏற்றுக்கொள்,

திருமால், நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மன் என எல்லாருக்கும் முன்னவனே, என்னை 'வா' என்று அழைத்து ஏற்றுக்கொள்,

இவ்வுலகில் அனைத்தும் அழிகின்ற அந்த ஊழிநாளுக்குப் பிறகும் நிலைத்திருப்பவனே, என்னை 'வா' என்று அழைத்து ஏற்றுக்கொள்,

பாவங்களை நாசம் செய்கிறவனே, உன்னுடைய கழலணிந்த திருவடிகள் மேல் அன்புகொண்டு, நாவினால் உன்னுடைய புகழைப் பாடிப் போற்றுவதற்காக, என்னை 'வா' என்று அழைத்து ஏற்றுக்கொள்,


சொல்லின்பம்

ஈறு: முடிவு

எளியை: எளியவன்

கீறு இலாத: கீறப்படாத/ பிளவுபடாத/ உடையாத

கடையன்: கடைசியாக உள்ளவன்

மன்ன: மன்னனே/ அரசனே

எம்பிரான்: எங்கள் தலைவன்

பெய்கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர அணிகலன்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிப்பிடுகிறது

பன்ன: பன்னுவதற்காக/ போற்றிப் புகழ்வதற்காக

நின்: உன்

சீர்: சிறப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.