ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 12 – திருச்சாழல் - 7

எம்பெருமானுக்குப் புள்ளிகளைக் கொண்ட புலியின் தோல்தான் ஆடை, ஆலகால விஷத்தை அவன் உண்கிறான்,

News image
Updated On :28 செப்டம்பர் 2015, 9:26 am

என்.சொக்கன்

‘சாழல்’ என்பது பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. இதுவும் மகளிர் விளையாடுவதுதான். இந்த விளையாட்டில் ஒருத்தி கேள்வி கேட்பாள், இன்னொருத்தி அதற்குப் பதில் சொல்வாள். இந்த அமைப்பில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இதில் இருபது பாடல்கள் உள்ளன. தில்லையில் அருளப்பட்டது.

85

பாடலின்பம்

அம்பரமாம் புள்ளித்தோல், ஆல்ஆலம் ஆர்அமுதம்

எம்பெருமான் உண்டசதுர் எனக்குஅறிய இயம்பேடீ.

எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும்

தம்பெருமை தான்அறியாத் தன்மையன் காண் சாழலோ.

*

அரும்தவருக்கு ஆலின்கீழ் அறம்முதலா நான்கனையும்

இருந்து அவருக்கு அருளும்அது எனக்குஅறிய இயம்பேடீ.

அரும்தவருக்கு அறம்முதல் நான்கு அன்று அருளிச் செய்திலனேல்

திருந்து அவருக்கு உலகுஇயற்கை தெரியா காண் சாழலோ.

பொருளின்பம்

ஒருத்தி: எம்பெருமானுக்குப் புள்ளிகளைக் கொண்ட புலியின் தோல்தான் ஆடை, ஆலகால விஷத்தை அவன் உண்கிறான், இதெல்லாம் ஏன்? எனக்கு விளக்கிச் சொல்.

இன்னொருத்தி: எம்பெருமான் எதை உடுத்தினாலும், எதை உண்டாலும், தன் சிறப்பைத் தானே அறியாத தன்மை கொண்டவன், இதை நீ அறிவாய்.

ஒருத்தி: அரிய தவம் செய்த நான்கு முனிவர்களுக்குக் கல்லால மரத்தின்கீழிருந்து அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் அருளினான் சிவபெருமான், இது ஏன்? எனக்குச் சொல்வாய்.

இன்னொருத்தி: அரிய தவம் செய்த அவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் சிவன் அருளிச்செய்யவில்லை என்றால், திருந்திய தன்மையுள்ள அந்த நால்வருக்கும் இந்த உலகத்தின் இயற்கை தெரியாமல்போயிருக்கும், ஆகவேதான் சிவபெருமான் அப்படி அருள் செய்தான்.

சொல்லின்பம்

அம்பரம்: ஆடை

ஆலாலம்: ஆலகால விஷம்

சதுர்: திறமை

இயம்பு: சொல்

அரும்தவர்: அரிய தவம் செய்தவர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.