சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 39

ஆதி சேடனுடைய ஆயிரம் தலைகளில் பொருந்தியுள்ள மகுடங்க(ளின் மேல்),

Updated On :24 அக்டோபர் 2015, 9:49 am

வேல் விருத்தத்தின் முதற்பாடலுக்குப் பொருளைப் பார்ப்போம்.

பதச் சேதம்

சொற் பொருள்

மகரம் அளறு இடை புரளமகரம்: சுறா, திமிங்கிலம் போன்ற பெரிய மீன்கள் (முதலை என்றும் பொருள்). அளறு: சேறு (நரகம் என்றும் பொருள்)
உரகம் கண மவுலிஉரகம்: பாம்பு கணம்: கூட்டம் மவுலி: மகுடம் (கூட்டமான பாம்புகளின் மகுடம் என்பதால் ஆதி சேடனின் தலை)
மதியும் இரவியும் மலையவேமதி: சந்திரன், இரவி: சூரியன், மலைதல்: தாக்குதல்
வளர் எழிலி குடர் உழலஎழிலி: மேகம்
இமையவர்கள் துயர் அகல தேவர் துயர் கெட
மகிழ்வு பெறும்மகிழ்ச்சியடையும்
அறு சிறையவாம்அறு: அறுக்கப்பட்ட சிறையவாம்: சிறகுகளை உடைய
சிகர வரை ...சிகரங்களை உடைய மலை
மனைவீடு
மறுகு தொறும்தெருக்கள் தோறும்
நுளைய மகளிர்நெய்தல் நிலத்துப் பெண்கள் (மீனவப் பெண்கள்)
செழு செநெல்களோடு தரளம் இடவேசெழு செநெல்: செழித்த செந்நெல், தரளம்: முத்து
செகம் சிரம்உலகத்தின் உயர்ந்த
பகிரதி முதல் நதிகள் கதி பெறபகிரதி: பகீரதி=கங்கை. கங்கை முதலான நதிகள் தடையின்றிப் பெருக
உததி திடர் அடையவும்உததி: கடல், திடர்: வெற்றுவெளி, திடல்
நுகரும் வடி வேல்பருகுவதான வடிவேல்
தகரதகரம் என்றால் வாசனைச் சாந்து
மிருக மதம் ...கஸ்தூரி
மண மருவுமணம் மருவுதல்: வாசம் கலந்திருத்தல்
கட கலுழி தருகடம்: (யானையின்) மதநீர் கலுழி: ஊற்று
கவுளும்கன்னமும்
உறு வள் எயிறும்உற்றதான, வலிய பல் (தந்தம்)
தழை செவியும்நீண்ட காதுகளும்
நுதல் விழியும்நெற்றி விழியும்
உடைய ஒரு கடவுள்உடைய கடவுளான விநாயகனுக்கு
மகிழ் தரு துணைவன்மகிழ்ச்சியைத் தரும் தம்பி
அமரர் குயிலும்தேவ சேனை
குகர மலைகுகரம்: குகை. குகைகளையுடைய மலை
எயினர் குல மட மயிலும்எயினர்: வேடர், வேடர்குல மயில்: வள்ளி
என இருவர்
குயமோடு அமர் புரியும்குயம்: மார்பகம்
முருகன் குமரன் அறுமுகன்முருகனை
எதிரும் விருதுஎதிர்த்து, (பல) விருது: வெற்றிச் சின்னங்கள்
நிசிசரர்நிசி: இரவு. சரர் உலவுபவர். நிசிசரர், நிசாசரர்: இரவில் உலவும் அரக்கர்கள்
அணிகள்சேலைகள்
குலைய விடுசிதைந்து போகுமாறு விடப்படும்
கொடிய வேலே ...கொடுமை நிறைந்ததான வேலே

மகரம் அளறு இடை புரள ... மிகப் பெரிய சுறா, திமிங்கிலங்கள் சேற்றில் புரள,

உரகம் கண மவுலி ... ஆதி சேடனுடைய ஆயிரம் தலைகளில் பொருந்தியுள்ள மகுடங்க(ளின் மேல்),

மதியும் இரவியும் அலையவே ... சந்திர, சூரியர்களின் ஒளி (கலந்து) தாக்க,

வளர் எழிலி குடர் உழல ... வளர்ந்து பெரிதாகப் பரந்துள்ள மேகங்களின் வயிறு கலங்க,

இமையவர்கள் துயர் அகல ... தேவர்களுடைய துயரம் நீங்க,

மகிழ்வு பெறும் ... மகிழ்ச்சியடைந்த,

அறு சிறையவாம் ... சிறகுகள் அறுக்கப்பட்ட,

சிகர வரை ... மலைகளின் சிகரங்களிலும்,

மனை ... வீடுகளிலும்,

மறுகு தொறும் ... தெருக்களிலும்

நுளைய மகளிர் ... மீனவப் பெண்கள்,

செழு செநெல்களோடு தரளம் இடவே ... செழிப்பான நெல்மணிகளையும் முத்துக்களையும் (குத்துவதற்காக உரலில்) இட,

செகம் சிரம் ... ஜகத்தில், உலகில், முதன்மையான நிலையை வகிக்கும்

பகிரதி முதல் நதிகள் கதி பெற ... கங்கை முதலான எல்லா நதிகளும் (ஏற்பட்ட தடைகள் விலகி, பழையபடி) ஓடத் தொடங்கவும்

உததி திடர் அடையவும் ... கடல் வற்றிப் போய் மணல் திடலாக, வெற்றுவெளியாக மாறிப் போகவும்

நுகரும் வடி வேல் ... கடல் நீர் (மொத்தத்தையும்) உறிஞ்சிக் குடித்த வேலாயுதம்,

(இப்படிப்பட்ட வேல் யாருடையதென்றால்)

தகரம் ... வாசனைச் சாந்து,

மிருக மதம் ... கஸ்தூரி (இவற்றின்)

மண மருவு ... நறுமணம் கலந்து வீசுவதும்,

கட கலுழி தரு ... மதநீர் ஊற்றைப் போல பெருகுவதான

கவுளும் ... கன்னமும்,

உறு வள் எயிறும் ... உறுதியும் திண்மையும் பொருந்திய (எயிறு: பல். இங்கே தந்தம்) தந்தத்தையும்

தழை செவியும் ... நீண்டு தழைத்துள்ள இரண்டு பெரிய காதுகளையும்

நுதல் விழியும் ... நெற்றிக் கண்ணும்,

உடைய ஒரு கடவுள் ... (இவை அத்தனையையும் பெற்று) விளங்கும் இறைவனான விநாயக(னுக்கு)

மகிழ் தரு துணைவன் ... மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இளைய சகோதரனும்,

அமரர் குயிலும் ... குயில்போன்ற இனிய குரலுடைய (அமரலோகத்தில் வளர்ந்த) தேவசேனையும்,

குகர மலை ... பல குகைகளைக் கொண்ட மலைகளில் (வசிக்கும்),

எயினர் குல மட மயிலும் ...வேடர் குலத்தில் வேடர் குலத்தில் வளர்ந்த அழகிய மயில் போன்ற வள்ளியும் ஆன,

என இருவர் ... இரண்டு தேவியரின்,

குயமோடு அமர் புரியும் ... மார்பகங்களை அணைக்கும்,

முருகன் ... முருகப் பெருமான்,

குமரன் ... பால சுப்ரமணியன்,

அறுமுகன் ... சண்முகன் ஆகிய முருகப் பெருமானை,

எதிரும் ... எதிர்த்து,

விருது ... பல வெற்றிச் சின்னங்களுடன் வந்த,

நிசிசரர் ... அரக்கர்களின்,

அணிகள் ... படைகளை,

குலைய விடு ... சிதறியோடச் செய்த,

கொடிய வேலே ... (அரக்கர்களுக்குக்) கொடியதான அதே வேல்தான்.

பாடல் என்ன சொல்கிறதென்றால்,

நடுக்கடலில் மாமரமாய் சூரபன்மன் நின்றபோது, அவன் ஒளிந்து நிற்கும் கடலின் மீது முருகன் வேல் வீச, கடல் வற்றிப்போனது. அதனால் கடல் இருந்த இடத்தில் சேறே மிஞ்சியது. அந்தச் சேற்றில் மிகப்பெரிய மகர மீன்கள் துடித்துப் புரண்டன. அப்படிப் புரள்கின்ற காரணத்தால் (கடலின் அடியாக இருந்த அந்த) சேற்றுப் பரப்பு விலகி, பாதாள லோகம் தெரிய, அப்படித் தெரியும் இடுக்குகளின் வழியே, பூமியைத் தாங்கி நிற்பவனான ஆதிசேடனுடைய ஆயிரம் மகுடங்கள் வெளிப்படுகின்றன. அப்படி வெளிப்படும் மகுடங்களில் பதித்துள்ள பல்லாயிரக்கணக்கான மணிகளில் சூரிய சந்திரர்களின் ஒளி தாக்கி, அவை பளபளக்கின்றன.

கடலில் வீசப்பட்ட வேலின் வேகத்தைத் தாங்காமல் மேகங்கள் வயிறு கலங்குவதால் பெருத்த மழை பெய்கிறது. சூரசம்ஹாரத்தால் இதுவரை அடைந்த துன்பங்களிலிருந்து விடுபட்ட தேவர்கள் மகிழ்கிறார்கள். இந்தச் சூரனாகிய மாமரம் கடலுக்கு நடுவில் அடைத்துக் கொண்டு நின்றதால் கடலில் வந்து கலப்பதான நதிகளுடைய ஓட்டம் தடைப்பட்டிருந்தது. இப்போது சூரசம்ஹாரம் நடந்துவிட்டதால், தடைநீங்கி, எல்லா நதிகளும் பழையமாதிரி ஓடத் தொடங்குகின்றன. (இந்திரனால் பழைய காலத்தில் சிறகுகள் அறுக்கப்பட்டனவாகிய) மலைகள், தங்கள்மேல் ஓடும் நதிகள் தடைநீங்கிப் பாய்வதால் சிரமம் நீங்கி மகிழ்கின்றன.

இப்படி வான் நிலையிலும், நீரோட்டத்திலும் ஏற்பட்டிருந்த தடைகள் விலகியதால், நதிகளின் ஓட்டத்தால் மலைகளிலுள்ள வயல்களில் நெல் செழித்து வளர்கிறது. அப்படி வளர்ந்த நெல்மணிகளைக் குத்துவதற்காக உரலில் இடும்போது, நீரோட்டத்தில் அடித்துவரப்பட்டு வயல்களில் இறைந்துகிடக்கும் முத்துகளும் கலந்துவிடுகின்றன.

இப்படி கடல் வற்றிப்போய், பாதாளலோகம் வெளிப்படும்படியாக சூரபத்மனை ஸம்ஹரித்ததால், நதிகளுடைய ஓட்டத்துக்கு ஏற்பட்ட தடை விலக, தேவர்கள் மகிழ, உலகில் செழிப்பு திரும்பும்படியாக வேல் வீசப்பட்டது. அது யாருடைய வேல்?

நீண்ட செவியும், நெற்றியில் மூன்றாவது கண்ணும் உள்ள (மூன்றாவது கண் சிவனுக்கும், தேவிக்கும், விநாயகனுக்கும், முருகனுக்கும் உரியது) விநாயகனுடைய தம்பியான முருகனுடையது. அந்த முருகனோ உலகில் இவ்வளவு துயரங்களையும் நீக்கிவிட்டு தேவசேனையையும் வள்ளியையும் அணைத்து மகிழ்பவன். தன்னை எதிர்த்து (பெரிய ஆடம்பரங்களுடன்) வந்த அரக்கக் கூட்டங்கள் குலையுமாறு வேல்விடுத்தவன். அந்தப் பராக்கிரமம் மிக்க வேல்தான் (கடல்வற்றடித்தது முதலான உக்கிரச் செயல்களைப் புரிந்த, நாம் பாடும்,) வேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.