பஞ்சபூத ஸ்தலங்களில் பிருதிவி ஸ்தலமான காஞ்சித் தலத்துக்கான பாடல் இது. இங்கே முருகன் குமரகோட்டத்தில் எழுந்தருளியிருக்கிறான்.
அடிக்கு (ஒற்றொழித்து) 28 எழுத்துகளும், 27வது எழுத்தைத் தவிர்த்து மற்ற எல்லா எழுத்துகளும் குறிலாகவும், ஒவ்வொரு சீரிலும் உள்ள மூன்றாம், ஐந்தாம் எழுத்துகள் (ஒற்று சேர்த்து) வல்லின மெய்யாகவும் உள்ள இந்தப் பாடலின் அமைப்பு மற்ற பாடல்களிலிருந்து சற்றே மாறுபடுகிறது. மற்ற எல்லாப் பாடல்களிலும் ஒவ்வோரடியிலும் நான்காவது அல்லது கடைசிச் சீரில் சற்று நிறுத்தி, அதைத் தொடரும் மடக்கடியைத் (கணக்குப்படி ஒரே அடி என்றாலும், தனித் துண்டாகப் படிக்கப்பட வேண்டியது என்பதால் சற்று உள்ளே தள்ளி மடக்கி அமைத்திருப்பதால் இதற்கு மடக்கடி என்று பெயர்) தனித் துண்டாகவும் படிப்போம். ஆனால் இந்தப் பாடலில் அடியின் முதல் பாதிக்கும் மடக்கடிக்கும் இடையிலுள்ள சீரில் தாளபேதம் ஏதுமில்லாமல் தொடர்வதை கவனிக்கவும். எனவே இதைப் படிக்கும்போது ஒரே நீளமான அடியாக ஒரேமூச்சில் படிக்கப்பட வேண்டிய பாடல் இது. ஒலிப்பதிவில் கேட்கவும்.
முருகன் திருவடியைச் சொல்லித் துதிக்கும் பேற்றை வேண்டுகிறது பாடல். அத்தவர் என்று முதலடியில் பயிலும் சொல்லை, ‘அந்தத் தவத்தவர்கள்’ என்று பொருள்காணத் தோன்றும். ஆனால் இச்சொல்லுக்குப் பொருட்பெண்டிர் என்ற பொருளைத் தருகிறார் குகத்திரு தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்கள். இதைப் போலவே மூன்றாமடியிலுள்ள ‘பனைக்கைக் கொக்கனை’ என்பதை இரண்டுவிதமாகப் பொருள் கொள்ள இடமிருக்கிறது. அதை நாளைக்குப் பார்ப்போம்.
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் தனதான
எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்
பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் குடில்மாயம்
எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்
பிறக்கைக்குத் தலத்திற்புக் கிடியாமுன்
தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற்
பெறச்செச்சைப் புயத்தொப்பித் தணிவோனே
செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்
திரட்டப்பிக் கழற்செப்பத் திறல்தாராய்
பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப்
பணத்துட்கக் கடற்றுட்கப் பொரும்வேலா
பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப்
பலிப்பப்பத் தருக்கொப்பித் தருள்வாழ்வே
கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக்
கிடைப்புக்குக் களிப்புக்குத் திரிவோனே
கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக்
கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/266896422&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருதுவென்ற லாமின் யமால்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

