இது திரிசிராப்பள்ளித் தலத்துக்கான பாடல். ‘இந்த உடல் என்பது பிரமன் தேர்ந்தெடுத்துப் பூட்டிய பொறி—யந்திரம். இதை நிலையென்று நினைத்து மயங்காதே. நம்மை ஆண்டுகொள்வதாக ஆறுமுகனார் கொடுத்த சீட்டு இதோ இருக்கிறது, திருநீறு இதோ இருக்கிறது பார்த்துக்கொள். வேலன் நம்மை ஆண்டுகொள்வது திண்ணம்’ என்று மனத்துக்கு உபதேசம் செய்கிறது. பரமசிவனாரை ‘என்தாதை’ என்று இந்தப் பாடலில் பேசுகிறார்.
பாடலின் அமைப்பில் (ஒற்றொழித்து) ஒவ்வொரு இரண்டாம், ஐந்தாம், எட்டாம் எழுத்தும் நெடிலாகவும்; இரண்டாமெழுத்து மெல்லின மெய்யாகவும்; ஒற்றைச் சேர்த்து ஒவ்வொரு பத்தாம் எழுத்தும் வல்லின மெய்யாகவும் அமைந்துள்ளன. அடிக்கு (ஒற்றொழித்து) முப்பத்துநான்கு எழுத்துகள். பாடலைப் பார்ப்போம்.

தந்தானன தானன தாத்தன

தந்தானன தானன தாத்தன

தந்தானன தானன தாத்தன தனதான

அந்தோமன மேநம தாக்கையை

நம்பாதெயி தாகித சூத்திர

மம்போருக னாடிய பூட்டிது இனிமேல்நாம்

அஞ்சாதமை யாகிரி யாக்கையை

பஞ்சாடிய வேலவ னார்க்கிய

லங்காகுவம் வாஇனி தாக்கையை ஒழியாமல்

வந்தோமிது வேகதி யாட்சியு

மிந்தாமயில் வாகனர் சீட்டிது

வந்தாளுவம் நாமென வீக்கிய சிவநீறும்

வந்தேவெகு வாநமை யாட்கொளு

வந்தார்மத மேதினி மேற்கொள

மைந்தாகும ராவெனு மார்ப்புய மறவாதே

திந்தோதிமி தீதத மாத்துடி

தந்தாதன னாதன தாத்தன

செம்பூரிகை பேரிகை யார்த்தெழ மறையோதச்

செங்காடென வேவரு மூர்க்கரை

சங்காரசி காமணி வேற்கொடு

செண்டாடிம காமயில் மேற்கொளு முருகோனே

இந்தோடிதழ் நாகம காக்கடல்

கங்காளமி னார்சடை சூட்டிய

என்தாதைச தாசிவ கோத்திர னருள்பாலா

எண்கூடரு ளால்நௌவி நோக்கியை

நன்பூமண மேவிசி ராப்பளி

யென்பார்மன மேதினி நோக்கிய பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருதுவென்ற லாமின் யமால்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை