பகுதி - 264

இன்றைய பாடல் திருச்செந்தூர் தலத்துக்கானது.  எல்லாவிதமான நோய்களும் நீங்கப் பெற்று எல்லாவகையான ஞான நூல்களையும் ஓதுகின்ற பேற்றைக் கேட்கிறது.

Updated On :1 ஜூன் 2016, 4:15 pm

இன்றைய பாடல் திருச்செந்தூர் தலத்துக்கானது.  எல்லாவிதமான நோய்களும் நீங்கப் பெற்று எல்லாவகையான ஞான நூல்களையும் ஓதுகின்ற பேற்றைக் கேட்கிறது.  ‘நாரி யென்பில்’ என்பதிலுள்ளதை ‘நாரி’ (பெண்) என்று கொள்ளாமல், நார்—நரம்பு என்று கொள்ள வேண்டும்.  பாடலைப் பார்ப்போம்.  பாடலில் காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியிருக்கிறார்; மன்மதனை எரித்தவர் இருக்கிறார்; பாற்கடலில் பள்ளிகொண்டு கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்தவர் இருக்கிறார்.  பொருளைக் காணும்போது இவர்களைக் காண்போம்.

தான தந்த தானதான தான தந்த தானதான

தான தந்த தானதான               தனதான

நாலு மைந்து வாசல்கீறு தூறு டம்பு கால்கையாகி

நாரி யென்பி லாகுமாக             மதனூடே

நாத மொன்ற ஆதிவாயில் நாட கங்க  ளானஆடி

நாட றிந்தி டாமலேக               வளராமுன்

நூல நந்த கோடிதேடி மால்மி குந்து பாருளோரை

நூறு செஞ்சொல் கூறிமாறி          விளைதீமை

நோய்க லந்த வாழ்வுறாமல் நீக லந்து ளாகுஞான

நூல டங்க வோதவாழ்வு            தருவாயே

காலன் வந்து பாலனாவி காய வென்று பாசம்வீசு

காலம் வந்து வோலமோல          மெனுமாதி

காம னைந்து பாணமோடு வேமி னென்று காணுமோனர்

காள கண்ட ரோடுவேத             மொழிவோனே

ஆல மொன்று வேலையாகி யானை யஞ்சல் தீருமூல

ஆழி யங்கை ஆயன்மாயன்         மருகோனே

ஆர ணங்கள் தாளைநாட வார ணங்கை மேவுமாதி

யான செந்தில் வாழ்வதான         பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.