பதச் சேதம் | சொற் பொருள் |
எழு திகழ் புவனம் நொடி அளவு தனில் இயல் பெற மயிலில் வருவோனே
| எழு: ஏழு; எழுதிகழ் புவனம்: ஏழு வகையான உலகங்கள்; இயல்பெற: அழகு விளங்க; |
இமையவர் பரவி அடி தொழ அவுணர் மடிவு உற விடுவது ஒரு வேலா
| அவுணர்: அரக்கர்; ஒருவேலா: ஒப்பற்ற வேலா (ஒரு என்பதற்கு ஒப்பற்ற என்று பொருள்); |
வழுதியர் தமிழில் ஒரு பொருள் அதனை வழி பட மொழியும் முருகேசா
| வழுதியர்: பாண்டியர்; ஒருபொருள்: ஒப்பற்றதாகிய அகப்பொருள் இலக்கணம்; |
மலர் அடி பணியும் மட மகள் பசலை மயல் கொடு தளர்வது அழகோ தான்
| பசலை: தேமல்; மயல்: மயக்கம்; |
முழுகிய புனலில் இன மணி தரளம் முறுகிடு பவளம் மிக வாரி
| இனமணி: திரளான மணிகள்; தரளம்: முத்து; முறுகிடு: முறுக்கிய, பின்னிய (கொடியைப் போல); |
முறையொடு குறவர் மட மகள் சொரியும் முது மலை அழக குருநாதா
| முதுமலை: விருத்தாசலம்; |
பழகிய வினைகள் பொடிபட அருளில் படிபவர் இதயம் உறு கோவே

பரு வரை துணிய ஒரு கணை தெரிவ பல மலை உடைய பெருமாளே.
| ஒருகணை: ஒப்பற்ற வேல் (கணை, வில், வேல் எல்லாம் ஆயுதப் பொது. ஒன்றை இன்னொன்றாகச் சொல்லலாம்.) |

எழுதிகழ் புவன நொடியள வதனில்… ஏழாக விளங்குகிள உலகங்கள் முழுவதையும் ஒரு நொடிப் பொழுதிலே,

இயல்பெற மயிலில் வருவோனே… அழகுபெற மயிலில் ஏறிச் சுற்றிவருபவனே!

இமையவர் பரவி அடிதொழ ... உன் திருவடிகளை தேவர்களெல்லோரும் போற்றித் துதிக்க,

அவுணர் மடிவுற விடுவது ஒருவேலா... அசுரர்கள் மடியும்படி ஒப்பற்ற வேலைச் செலுத்தியவனே!

வழுதியர் தமிழின் ... பாண்டியர்கள் வளர்த்த தமிழில்,

ஒருபொரு ளதனை ... ஒப்பற்றதாகச் செய்யப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தின் (உரைகளில் சிறந்தது எது என்று),

வழிபட மொழியு முருகேசா... (புலவர்கள்) வணங்கிக் கேட்டுக்கொள்ள (சிறந்தது எதுவென்பதைச்) சொன்ன முருகேசனே!

(இந்த நிகழ்வை சேவல் விருத்தத்தின் எட்டாம் பாடலை விளக்கும்போது (98ம் தவணை) பின்வருமாறு சொல்லியிருக்கிறோம்: “இறையனார் அகப் பொருளுக்கு சங்கப் புலவர்கள் நாற்பத்தொன்பது பேரும் செய்த உரையில் எது சிறந்த உரை என்ற விவாதம் முற்றிய போது, சோமசுந்தரேசர் சொற்படி மதுரையில் தனபதி செட்டியார் என்பவருடைய மகனாக வந்து அவதரித்து உருத்திரசென்மர் (ருத்ரஜன்மர்) என்ற பெயர் படைத்த சிறுவனை அழைத்துத் தொழுது சங்கப் பலகையில் அமர்த்தி இந்தக் கேள்வியை அவன் முன் வைக்க, நக்கீரர், கபில பரணர் ஆகிய மூவரின் உரையே சிறந்தது என்று உணர்த்திய செய்தி சொல்லப்படுகிறது. தனபதி செட்டியாரின் மகனாக அவதரித்த காரணத்தாலேயே முருகனுக்குச் செட்டி, செட்டியார் என்ற பெயர் வழங்கிவருகிறது”.)

மலரடி பணியு மடமகள் பசலை மயல்கொடு தளர்வ(து)அழகோதான்? ..... உன் மலர்ப்பாதங்களைப் பணிகின்ற இந்த அறியாச் சிறுமி, உன்மேல் ஏற்பட்ட காதலால் பசலை பூத்து, மையலால் தளர்ச்சி எய்துவது நியாயந்தானா?

முழுகிய புனலில் இனமணி ... (ஆற்று) நீரோட்டத்தில் முழுகி அதிலிருந்து குவியலான மணிகளையும்,

தரள முறுகிடு பவள மிகவாரி ... முத்துகளையும் (கொடிகளைப் போல) முறுக்கிக் கொண்டிருக்கும் பவளங்களையும் நிறைய அள்ளியெடுத்து,

முறையொடு குறவர் மடமகள் சொரியு ... (விற்பதற்காகக்) கூவுகின்ற குறக்குலத்துப் பெண்கள் நிறைந்திருக்கின்ற,

முதுமலை அழக குருநாதா ... விருத்தாசலத்தில் (முது: விருத்த; மலை: அசலம்) வீற்றிருக்கும் அழகனே! குருநாதனே!

பழகிய வினைகள் பொடிபட ... (நாள்பட்டதனால் எமக்குப்) பழகியவையாய் ஆன வினைகள் பொடிபடும்படி,

அருளில் படிபவர் இதயம் உறுகோவே ... உன்னுடைய அருளில் தோயும் அடியவர்களாகிய எங்களுடைய இதயத்தில் கொலுவிருக்கும் மன்னனே!

பருவரை துணிய ஒருகணை தெரிவ.. பெருத்திருந்த கிரெளஞ்ச கிரியைத் தூளடிப்பதற்காக ஒப்பற்ற வேலைத் தேர்ந்தெடுத்துச் செலுத்தியவனே!

பலமலை உடைய பெருமாளே. ... பற்பல மலைகளுக்கும் உரிமை படைத்தவனான பெருமாளே!

சுருக்க உரை

ஆற்று வெள்ளத்திலிருந்து குவியல் குவியலான மணிகளையும்; முத்துகளையும்; கயிறு கயிறாக முறுக்கிக் கொண்டுள்ள பவளங்களையும் அள்ளியெடுத்து விலைகூறிக் கூவுகின்ற குறப்பெண்கள் நிறைந்திருப்பதான முதுகிரி என்னும் விருத்தாசலத்தில் வீற்றிருப்பவனே! அடியார்களாகிய எங்களோடேயே பழகி, எம்முள்ளேயே ஊறிக்கிடக்கும் பழவினைகள் அனைத்தும் பொடிபடும்படியாக, உனது திருவருளில் மனமுருகிக் கிடக்கும் எம்முடைய உள்ளங்களில் வீற்றிருக்கும் இறைவனே!

ஒருநொடிப் போதில் ஏழு உலகங்களையும் மயில்மீதில் ஏறி வலம் வந்தவனே! தேவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க அசுரகளை அழிப்பதற்கக வேலை வீசியவனே! அகப்பொருள் இலக்கண உரையில் சிறந்தது எது என்பதைச் சொல்லியருளக் கேட்டுக்கொண்ட சங்கப்புலவர்களுக்கு சிறந்த உரை எது என்பதைச் சொன்னவனே! உனது மலரடியைப் பணியும் இந்த அறியாச் சிறுமி உன்மீது கொண்ட மோகத்தால் தளர்ச்சியடைவது நியாயமா? (உன்னையே நினைத்து வாழும் அடியார்களுடைய வினைகள் பொடிபடும்படி எப்போதும் அவர்களுடைய உள்ளங்களில் தங்கியிருப்பது போலவே இவளையும் ஆட்கொண்டருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருதுவென்ற லாமின் யமால்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை