பதச் சேதம் | சொற் பொருள் |
சங்கை கத்தோடு சிலுகிடு சங்கி சட் கோல சமயிகள் சங்கற்பித்து ஓதும் வெகு வித கலை ஞான
| சங்கை: சந்தேக; கத்தோடு: கூச்சலோடு (கத்துதலோடு); சிலுகு: வாதம், argument; சட்கோல சமயிகள்: ஆறுவித சமயத்தவர்களும்; சங்கற்பித்து: உறுதிமொழி செய்து; கலைஞானம்: சாத்திர ஞானம்; |
சண்டைக்குள் கேள்வி அலம் அலம் அண்டற்கு பூசை இடுமவர் சம்பத்து கேள்வி அலம் அலம் இமவானின்
| அலம் அலம்: போதும் போதும்; அண்டற்கு: (அண்டத்தைப் படைத்தவனான) கடவுளுக்கு; சம்பத்து: செல்வம்; கேள்வி: கேட்டதனால் அறிந்தது; |
மங்கைக்கு பாகன் இருடிகள் எங்கட்கு சாமி என அடி வந்திக்க பேசி அருளிய சிவ நூலின்
| இருடிகள்: முனிவர்கள், ரிஷிகள்; |
மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன யந்த்ரத்து கேள்வி அலம் அலம் வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே
| மந்த்ர: மந்திரங்களின்; ப்ரஸ்தார: கணக்கு பிரமாண; தரிசன: காட்சியை விளக்கும்; யந்த்ரத்து: சக்கரங்களின் (யந்திரங்களின்); |
வெங்கை சுக்ரீபர் படையை இலங்கைக்கு போக விட வ(ல்)ல வென்றி சக்ரேசன் மிக மகிழ் மருகோனே
| வெங்கை: வெம்மையான பராக்கிரமம் பொருந்திய கை; சுக்ரீபர்: சுக்ரீவன்; சக்ரேசன்: சக்கரப் படைக்கு உரியவன்; |
வெண் பட்டு பூண் நல் வனம் கமுகு எண்பட்டு பாளை விரி பொழில் விஞ்சிட்டு சூழ வெயில் மறை வயலூரா
| கமுகு: பாக்கு மரம்; எண்பட்டு: எண்ணில் பட்டு, மதிக்கப்பட்டு; பொழில்: சோலை; வெயில் மறை: வெய்யிலை மறைக்கின்ற, நிழலான; |
கொங்கைக்கு ஒப்பாகும் வட கிரி செம் கைக்கு ஒப்பாகும் நறு மலர் கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என வன மாதை
| வடகிரி: மேரு; வனமாது: வள்ளி; |
கும்பிட்டு காதல் குனகிய இன்ப சொல் பாடும் இளையவ கொங்கில் பட்டாலி நகர் உறை பெருமாளே.
| குனகிய: கொஞ்சிப் பேசிய; கொங்கில்: கொங்கு நாட்டில்; |

சங்கைக் கத்தோடு சிலுகிடு சங்கிச் சட் கோல சமயிகள் ... ஐயத்தோடும் கூச்சலோடும் வாதம் செய்கின்ற ஆறுவகை சமயத்தவர்களும்,

சங்கற்பித்து ஓதும் வெகு வித கலை ஞானச் சண்டைக்குள் கேள்வி அலம் அலம் ... சங்கற்பம் செய்துகொண்டு பேசுவதான பலவிதமான சாத்திர ஞானச் சண்டைகளுக்குத் தேவைப்படுகின்ற அறிவெல்லாம் போதும் போதும்;

அண்டற்குப் பூசை இடுமவர் சம்பத்துக் கேள்வி அலம் அலம் ... அண்டத்தைப் படைத்தவனான இறைவனுக்குப் பூசை செய்பவர்களுடைய கேள்வி ஞானமான செல்வமும் போதும் போதும்;

இமவானின் மங்கைக்குப் பாகன் இருடிகள் எங்கட்குச் சாமி என அடி வந்திக்கப் பேசி அருளிய ... இமவான் மகளான உமையைப் இடப் பாகத்தில் வைத்திருப்பவனும்; முனிவர்களெல்லாம் ‘எங்களுடைய ஈசன்’ என்று துதிப்பவருமான சிவபிரானைக் குறித்துச்,

சிவ நூலின் மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன அந்த்ரத்துக் கேள்வி அலம் அலம் ... சிவநூல்களில் சொல்லப்பட்டுள்ள மந்திரங்களுக்கு, கணக்குப் பூர்வமாக தரிசனத்தை விளக்குவதான யந்திரங்களைப் பற்றிய நுணுக்கமான ஆராய்ச்சி அறிவும் போதும் போதும்;

வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே ... இப்படிப்பட்ட வீணான வழிகளில் நான் சுற்றி அலையாமல் எனக்கு முக்திநிலையைத் தந்தருள வேண்டும்.

வெங்கைச் சுக்ரீபர் படையை இலங்கைக்குப் போக விட வ(ல்)ல வென்றிச் சக்ரேசன் மிக மகிழ் மருகோனே ... போரிலே வெம்மை மிக்கவன் என்ற பராக்கிரமம் உள்ள சுக்ரீவனுடைய வானரப் படையை இலங்கையை எதிர்த்துச் செல்லவிடுவதற்கு வல்லவனும்; வெற்றியை உடையதான சக்கரப் படையை ஏந்தியவனுமான திருமால் மனம் மகிழும் மருகனே!

வெண் பட்டுப் பூண் நல் வனம் கமுகு எண்பட்டுப் பாளை விரி பொழில் விஞ்சிட்டுச் சூழ வெயில் மறை வயலூரா ... நல்ல அழகிய பாக்கு மரங்கள், வெள்ளை பட்டாடைய அணிந்துள்ளததைப் போல பாளை விரித்திருக்கும் (விரித்திருப்பதாக மதிக்கப்படும்) சோலைகள் அதிகமாகச் சூழ்ந்திருப்பதால் நிழல் நிறைந்த வயலூரில் வீற்றிருப்பவனே!

கொங்கைக்கு ஒப்பாகும் வட கிரி செம் கைக்கு ஒப்பாகும் நறு மலர் கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என ... மார்பகக்துக்கு நிகர் மேரு மலையே; சிவந்த கைக்கு நிகர் வாசமலரே; கூந்தலுக்கு நிகர் மேகமே என்றெல்லாம்,

வன மாதைக் கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச் சொல் பாடும் இளையவனே ... வன மகளான வள்ளியைக் கும்பிட்டுத் துதித்துக் காதல் மொழிகளை இனிய சொற்களால் பாடியவனான இளையவனே!

கொங்கில் பட்டாலி நகர் உறை பெருமாளே. ... கொங்கு நாட்டிலுள்ள பட்டாலியூர் என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

கொடிய பராக்ரமத்தை உடைய சுக்ரீவனுடைய வானரப் படையை இலங்கையின் மீது போருக்கு எழுமாறு செலுத்த வல்லவரும்; வெற்றியே நிலைத்திருக்கும் சக்கரப்படையை ஏந்தியவருமான திருமாலின் மருமகனே! பாக்கு மரங்களின் தோப்பில் விரித்திருக்கிற பாளையை பார்க்கும் போது ‘விரித்திருக்கும் வெண்பட்டை இவை அணிந்திருக்கின்றனவோ’ என்று எண்ண வைக்கும் தோப்புகளும், சோலைகளும் மிகுந்திருப்பதால் குளிர்ந்த நிழல் தங்கியுள்ள வயலூரில் வீற்றிருப்பவனே! ‘உன் மார்புக்கு நிகர் மேரு மலையே; உன் சிவந்த கைக்கு நிகர் வாசமுள்ள மலரே; உன்னுடைய கருங்கூந்தலுக்கு நிகர் மேகமே’ என்றெல்லாம் வன மகளான வள்ளியிடம் காதல் மொழிகளைக் கொஞ்சிப் பேசியும் பாடியும் செய்த இளையவனே! கொங்கு நாட்டுப் பட்டாலியூரில் வீற்றிருப்பவனே!

சந்தேகத்தோடும், வெற்றுக் கூச்சல்களோடும் வாதம் செய்பவர்களான ஆறு சமயவாதிகளின் சாத்திர ஞானமும் போதும் போதும்; கடவுளைப் பூசிப்பவர்களுடைய கேள்வி ஞானமும் போதும் போதும்; ‘உமையொரு பாகன்’ என்றும், ‘எங்கள் ஈசன்’ என்றும் முனிவர்கள் துதிக்க, சிவ நூல்களில் சொல்லப்பட்டுள்ள மந்திர பிரமாணங்களின் ஆராய்ச்சிகளும், அறிவும் போதும் போதும்; இப்படிப்பட்ட வீணான சுற்று வழிகளில் நான் அலைந்து திரியாமல் அடியேனுக்கு முக்தியை அளித்தருள வேண்டும்.

(ஆறு சமயங்களையும் மிக உயர்வாகப் பேசினாலும், சமய சச்சரவுகளை அடியோடு வெறுத்தவர் அருணகிரியார். இதைப் பல பாடல்களில் காணலாம்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருதுவென்ற லாமின் யமால்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை