வெள்ளியங்கிரி எனப்படும் திருக்கயிலாயத் தலத்துக்கான பாடல் இது. பல பாடல்களில் வெளிப்பட்டிருப்பது போலவே இப்பாடலிலும் பரமசிவனாரிடத்தில் அருணகிரியாருக்கு உள்ள பக்தி அழகாக வெளிப்படுகிறது. முதலடியின் இறுதியில் ‘சீவன் சிவச் சொரூபம் எனத் தேறி’ என்கிறார். இதைத்தான் திருமூலர்,
சீவ னெனச்சிவ னென்னவே றில்லை
சீவ பார்சிவ னாரை யறிகிலர்
சீவ னார்சிவ னாரை யறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட்டிங் கிருப்பரே
(திருமந்திரம் 1979) என்கிறார்.
பாடலில் அடிக்கு ஒற்றொழித்து இருபத்தைந்து எழுத்துகள்; (ஒற்று உட்பட) மூன்று, பன்னிரண்டு, இருபத்தொன்று ஆகிய எழுத்துகள் மெல்லின மெய்; ஆறு, பதினைந்து, இருபத்து நான்கு ஆகிய எழுத்துகள் வல்லின மெய். ‘ஞானம் பெருகி எழ, மகிழ்ச்சி தரும் ஆனந்தசித்தியை அடைநது நாள்தோறும் உன்னுடைய திருவடிகளை அருளவேண்டும்’ என்று கோருகிறது பாடல்.
தானந்த னத்ததன தானந்த னத்ததன
தானந்த னத்ததன தனதான
தேனுந்து முக்கனிகள் பால்செங்க ருப்பிளநிர்
சீரும்ப ழித்தசிவ மருளூரத்
தீரும்பி டித்தவினை யேதும்பொ டித்துவிழ
சீவன்சி வச்சொருப மெனதேறி
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
நாதம்ப ரப்பிரம வொளிமீதே
ஞானஞ்சு ரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளும்க ளிக்கபத மருள்வாயே
வானந்த ழைக்கஅடி யேனுஞ்செ ழிக்கஅயன்
மாலும்பி ழைக்கஅலை விடமாள
வாருங்க ரத்தனெமை யாளுந்த கப்பன்மழு
மானின்க ரத்தனருள் முருகோனே
தானந்த னத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண்க டப்பமல ரணிமார்பா
தானங்கு றித்துஎமை யாளுந்தி ருக்கயிலை
சாலுங்கு றத்திமகிழ் பெருமாளே.
</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/270149707&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருதுவென்ற லாமின் யமால்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

