அனுபவ ஞானம் எனப்படும் அனுபூதி நிலையை அருளும்படி இறைவனை வேண்டும் இந்தப் பாடல் திருச்சிக்கு அருகேயுள்ளதும் சோழநாட்டின் தலைநகரான ‘வஞ்சி’ என்றறறியப்படுவதுமான கருவூருக்கு உரிய பாடல்.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளை உடைய இந்தப் பாடலில் தொங்கல் சீரை ஒழித்து மற்ற எல்லாச் சீர்களிலும் மூன்று மூன்று எழுத்துகள் அமைந்துள்ளன. இருந்தாலும் இதற்குள்ளும் ஒரு வேறுபாடு அமைந்திருக்கிறது. ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் இரண்டு குறிலும் மூன்றாவது எழுத்தாக ஒரு நெடிலையும் கொண்டவை; இரண்டு, நான்கு ஆறு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும்; இவற்றைத் தொடர்ந்து (கணக்கில் சேராத) ஒரு வல்லொற்றையும் கொண்டவை.
தனனா தனனத் தனனா தனனத்
தனனா தனனத் தனதான
தசையா கியகற் றையினால் முடியத்
தலைகா லளவொப் பனையாயே
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
றவிரா வுடலத் தினைநாயேன்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
படுபூ ரணநிட் களமான
பதியா வனையுற் றநுபூ தியிலப்
படியே யடைவித் தருள்வாயே
அசலே சுரர்புத் திரனே குணதிக்
கருணோ தயமுத் தமிழோனே
அகிலா கமவித் தகனே துகளற்
றவர்வாழ் வயலித் திருநாடா
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
கமலா லயன்மைத் துனவேளே
கருணா கரசற் குருவே குடகிற்
கருவூ ரழகப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

