‘உனக்குத் தொண்டாற்றுவதற்காகத் தமிழைப் பாடவேண்டும்; உலகம் என்னைப் புலவனெனக் கொண்டாட வேண்டும்; அடியேன் ஞானக்கண்ணைப் பெறவும் புகழடையவும் உன்னுடைய கிருபை நிறைந்த சித்தத்தால் அருளவேண்டும்’ என்று நீண்ட கோரிக்கையை சமர்ப்பிக்கும் இந்தப் பாடல் திருச்செந்தூர்த் தலத்துக்கானது. தமிழைப் பாடவும் ஞானவான்களாகச் சிறக்கவும் புகழடையவும் அடியார்கள் இறைவனை இந்தப் பாடலால் போற்றலாம்.
சற்றே சிக்கலான சந்த ஓட்டம் கொண்ட இந்தப் பாடல், அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்டது. ஒவ்வொரு சீரிலும் மூன்றாவது, ஐந்தாவது எழுத்துகள் வல்லொற்று; கடைசியாக வரும் எழுத்து மெல்லொற்று என்று கலந்து நடக்கும் சந்தம்.
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந் தனதான
பெருக்கச்சஞ் சலித்துக்கந்
தலுற்றுப்புந் தியற்றுப்பின்
பிழைப்பற்றுங் குறைப்புற்றும் பொதுமாதர்
ப்ரியபட்டங் கழைத்துத்தங்
கலைக்குட்டங் கிடப்பட்சம்
பிணித்துத்தந் தனத்தைத்தந் தணையாதே
புரக்கைக்குன் பதத்தைத்தந்
தெனக்குத்தொண் டுறப்பற்றும்
புலத்துக்கண் செழிக்கச்செந் தமிழ்பாடும்
புலப்பட்டங் கொடுத்தற்கும்
கருத்திற்கண் படக்கிட்டும்
புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் புரிவாயே
தருக்கிக்கண் களிக்கத்தெண்
டனிட்டுத்தண் புனத்திற்செங்
குறத்திக்கன் புறச்சித்தந் தளர்வோனே
சலிப்புற்றங் குரத்திற்சம்
ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்
சமர்த்திற்சங் கரிக்கத்தண் டியசூரன்
சிரத்தைச்சென் றறுத்துப்பந்
தடித்துத்திண் குவட்டைக்கண்
டிடித்துச்செந் திலிற்புக்கங் குறைவோனே
சிறக்கற்கஞ் செழுத்தந்தந்
திருச்சிற்றம் பலத்தத்தந்
செவிக்குப்பண் புறச்செப்பும் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

