ஆதரவற்ற நிலையில் தனித்திருக்கும் உன் திருவடிகளைத் தந்து ஆதரித்து அருள வேண்டும் என்று கோரும் இப்பாடல் பழநித் தலத்துக்கானது.
அமைப்பு முறையில் அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்; தொங்கல் சீர் ஒன்று நீங்கலாக மற்ற எல்லாச் சீர்களும் குறில். நெடில் பயிலவில்லை.
தனன தனன தனன தனன
தனன தனன தனதான
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

