இப்பாடல் வடகூர் என்ற தலத்துக்கானது. இத்தலம் புதுச்சேரிக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிருக்கிறது என்பது உரையாசிரியர் குகஸ்ரீ தணிகைமணியவர்களுடைய குறிப்பால் தெரிகிறது. முருகனுடைய திருவடிகளைத் தொழும் பேறு ஒன்றையே வரமாகக் கேட்கும் பாடல் இது.
அமைப்பு முறையில் அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் எல்லா எழுத்துகளும் குறில்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒவ்வொரு மூன்றாவது எழுத்தும் நெடில்.
தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா தனதான
அரியய னறியா தவரெரி புரமூ
ணதுபுக நகையே வியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
றழலையு மழுநேர் பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியே வியநாதர்
மனமகிழ் குமரா எனவுள திருதாள்
மலரடி தொழுமா றருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
அவனியை வலமாய் வருவோனே
அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய் விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
மருவியொர் குறமா தணைவேடா
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முநிவோர் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

