மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 520

திருச்செங்கோடு தலத்துக்கானது.

Updated On :30 மார்ச் 2017, 6:30 pm

உன்னுடைய திருவடிகளில் வைத்திருக்கும் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்படி அருளவேண்டும் என்று கோருகிற இப்பாடல் திருச்செங்கோடு தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்; ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒற்றொழித்து நான்கு குற்றெழுத்துகளைக் கொண்டவை; கணக்கில் சேராத இரண்டாம் எழுத்து வல்லொற்று; முதற் சீரும் மூன்றாம் சீரும் எதுகையாக அமைந்துள்ளன.  இப்படி அமைவதை வழியெதுகை என்று சொல்வோம்.  இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் நெடிலோடு தொடங்கும் இரண்டெழுத்துகளைக் கொண்டவை. 

தத்ததன தான தத்ததன தான
      தத்ததன தான                      தனதான

புற்புதமெ னாம அற்பநிலை யாத
         பொய்க்குடில்கு லாவு             மனையாளும்
      புத்திரரும் வீடு மித்திரரு மான
         புத்திசலி யாத                   பெருவாழ்வு

நிற்பதொரு கோடி கற்ப மெனமாய
         நிட்டையுடன் வாழு              மடியேன்நான்
      நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
         நிற்கும்வகை யோத              நினைவாயே

சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
         சக்ரகதை பாணி                  மருகோனே
      தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற        
வைத்தவொரு காழி              மறையோனே
 

கற்பவழு வாது வெற்படியின் மேவு
         கற்றைமற வாணர்               கொடிகோவே
      கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
         கற்பதரு நாடர்                   பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.