ராகேஷ் ஷர்மா இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப் படிப்பை ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர் 1966-இல் அவர் தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார்.
இவர் 1970இல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார். 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார். நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளிப் பயணத்திற்கு செய்த விண்ணப்பத்தில் ராகேஷ் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 138-வது மனிதராவார். இவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார்.
விண்வெளியில் பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது. அவரது பணிகளை பாராட்டி ராகேஷ் சர்மாவுக்கு அசோகா சக்ரா விருது கிடைத்தது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லேயா்கேம்பில் முளைப்பாரி ஊா்வலம்
தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
பெண்ணை மிரட்டிய வழக்கு: யூடியூபா் கைது

கங்கை நதியில் மாசுபாடு குறைந்து வருகிறது: மத்திய அரசு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


